பிரச்சனைகள் எல்லாருடைய வாழ்க்கையிலும் இருக்கு… ஆனாலும் எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்?… விஜய் ஆண்டனியின் கருத்து…

திருநெல்வேலியில் பிறந்த விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், திரைப்பட தொகுப்பாளர், ஆடியோ பொறியாளர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறமைகளைக் கொண்டவர். 2005 ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார். சிறந்த இசைப் பிரிவில் நாயக முக்கா விளம்பரப் படத்துக்காக 2009 ஆம் ஆண்டு கேன்ஸ் கோல்டன் லயன் விருதை வென்ற முதல் இந்திய இசை இயக்குனர் விஜய் ஆண்டனி அவர்கள் தான். அந்தப் பாடல் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பையில் இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 2012 ஆம் ஆண்டு ‘நான்’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு ‘சலீம்’, ‘இந்தியா பாகிஸ்தான்’ போன்ற திரைப்படங்களில் நடித்தார். அந்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. விஜய் ஆண்டனிக்கு திருப்பு முனையாக அமைந்த படம் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் தான். அதிரடி திரில்லர் திரைப்படமான ‘பிச்சைக்காரன்’ வணீக ரீதியாகவும் வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்தது.

அதற்குப் பின்னதாக நடிப்பில் பிஸியாகி விட்டார் விஜய் ஆண்டனி. அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் விஜய் ஆண்டனியின் 16 வயது மூத்த மகள் தற்கொலை செய்துக் கொண்டார். அந்த சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதை விஜய் ஆண்டனி எப்படி தாங்கி கொள்வார் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் மகள் இறந்த சிறிது நாட்களிலே வெளியே வந்தார். படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது அவர் நடித்த ‘ரோமியோ’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்த திரைப்படத்திற்காக விஜய் ஆண்டனி பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில் தன் வீட்டில் நடந்த இழப்பை பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். அதில், நான் எனக்காக ஓடினதை விட என் குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் ஓடி கொண்டிருக்கிறேன். ஆனால் எதிர்பாராத விதமாக என் வீட்டில் இழப்பு நடந்துருச்சு. அதனால் நான் உடைந்து போய்விட்டேன். அந்த நேரத்தில் என்னை நம்பி படம் பண்ணினவர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக என்னைத் தேற்றிக் கொண்டு மீண்டும் என் பயணத்தை ஆரம்பித்தேன்.

இந்த உலகத்தில் நான் மட்டும் சோகத்தை சுமந்து கொண்டு இருக்கவில்லை. எல்லா வீட்டிலும் பிரச்சனைகள் இருக்கிறது, எல்லா ஆண்களும், பெண்களும் எதோ ஓரு சோகத்தை சுமந்துக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எதற்காக என்றால் அவர்கள் குடும்பத்திற்காக, அவர்களை நம்பியவர்களுக்காக, அதுபோல தான் என்னுடைய பயணமும் போய்க் கொண்டிருக்கிறது. என்னை நம்புற இயக்குனர்களை கஷ்டப்படுத்த கூடாது என்பதற்காக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...