அடேங்கப்பா!.. குவியும் பாராட்டு மழை!.. ஆடு ஜீவிதம் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?..

பிரித்திவிராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆடு ஜீவிதம் திரைப்படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்திய சினிமாவின் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் இந்தப் படத்திற்காக இயக்குனர் பிளஸ்ஸி போட்டிருக்கும் உழைப்பு மற்றும் பிரித்திவிராஜ் மெனக்கெடல் போன்றவற்றைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போய் உள்ளனர்.

ஆடு ஜீவிதம் வசூல்:

மரியன் படத்தை போல ஆடுஜீவிதம் இருக்கிறது என சிலர் கருத்துக்களை சொன்னாலும், அந்தப் படத்திற்கும் இந்த படத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்றும் பிரித்திவிராஜ் நடிப்பு படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது என்றும் கூறுகின்றனர்.

காந்தாரா படத்தின் ஹீரோ ரிஷப் செட்டி முதல் மணிரத்னம், சூர்யா, யோகி பாபு என பல பிரபலங்கள் ஆடு ஜீவிதம் படத்தின் எக்ஸ்பீரியன்ஸை கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து ஒரு உலக சினிமா ஆடு ஜீவிதம் என ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், முதல் நாளில் ஆடு ஜீவிதம் திரைப்படம் உலகம் முழுவதும் 16.7 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக நடிகர் பிரித்விராஜ் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளார். ஒரு வாரத்துக்கு கொச்சின் தியேட்டர்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல் ஆகி வருவதாக கூறுகின்றனர்.

கேரளாவில் ஆடு ஜீவிதம் கதைக்கு பலரும் ரசிகர்கள் என்பதால், தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து வருகின்றனர். மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை போல ஆடு ஜீவிதம் படமும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...