பிரித்விராஜ் நடிப்பில் ‘ஆடுஜீவிதம்’… நான்கு மொழிகளில் அவரே டப்பிங் பேசியுள்ளாராம்…

மலையாள திரைப்பட இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘ஆடுஜீவிதம்’. எழுத்தாளர் பென்யமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ என்ற நாவலைத் தழுவி இந்தப் படம் உருவாகி உள்ளது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக படப்பிடிப்பு, போஸ்ட் ப்ரொடெக்ஷன் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

நடிகர் பிரித்விராஜ் இந்தப் படத்தில் அரபு நாட்டில் ஒட்டகம் மேய்க்கும் நபராக நடித்துள்ளார். தனது விருப்பத்துக்கு மாறாக ஆடு மேய்க்கும் வேலையில் அமர்த்தப்பட்ட ஒரு புலம்பெயர்ந்த மலையாள தொழிலாளியை பற்றிய கதையாகும். இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

விருப்பம் இல்லாத வேலையில் நியமிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளி, அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்து மாட்டிக்கொள்கிறார். அதன்பின் அடிமையாக மாற்றுகின்றனர். அடிமைத்தனம், வன்முறை, அடக்குமுறை ஆகியவற்றை இப்படம் எடுத்துரைக்கிறது. மேலும் கதாநாயகன் தப்பித்தாரா என்பது மீதி கதை.

இப்படத்தில் கதாநாயகியாக அமலா பால் நடித்துள்ளார். இதில் ஜிம்மி ஜீன் – லூயிஸ், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, அகேஃப் நஜெம் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கே.ஜி. ஆபிரகாம், ஜிம்மி ஜீன் லூயிஸ், ஸ்டீவன் ஆடம்ஸ் ஆகியோருடன் இணைத்து இயக்குனர் பிளஸ்சி இப்படத்தை தயாரித்துள்ளார். டான், ஆஜா நச்லே. ஃபுக்ரே போன்ற பாலிவுட் படங்களின் மூலம் பிரபலமான கே. யு. மோகனன் ஒளிப்பதிவு மற்றும் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளனர்.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இத்திரைப்படம் ஒரு பான் இந்தியா படமாக வருகிற மார்ச் 28 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்திலேயே லைவ் ரெகார்டிங் முறையில் வசனங்கள் பதிவு செய்யப்பட்டன. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு நடிகர் பிரித்விராஜ் அவர்களே நான்கு மொழிகளில் டப்பிங் பேசியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வழக்கத்திற்கு மாறாக நீண்ட தாடியுடன் புதிய தோற்றத்தில் நடிகர் பிரித்விராஜ் இப்படத்தில் நடித்திருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...