லவ் டுடே படத்தின் வெற்றியால் தலைகால் புரியாமல் ஆடும் பிரதீப்! அடுத்தடுத்த படத்தின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருப்பார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் பட்டையை கிளப்பியது. 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

முதல் படத்தில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தில் இயக்குனர் மற்றும் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். கடந்த ஆண்டு வெளியான லவ் டுடே திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. ஏ ஜி எஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் கீழ் கல்பாத்தி எஸ் அகோரம் இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக இவானா இயல்பான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் அமைந்த இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பிரதீப்பின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான இந்த திரைப்படமும் ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற தொடங்கியதில் இருந்து அடுத்தடுத்து ஹீரோவாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.

மேலும் சமூக வலைதளங்களில் அகில இந்திய பிரதீப் ரங்கநாதனின் ரசிகர் கூட்டம் என பல ரசிகர்கள் தங்களது ஆதரவை ஹீரோ பிரதீப்பிற்கு தெரிவித்தும் வருகின்றனர். லவ் டுடே திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் பிரதீப் தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல் ஐ சி படத்தில் நடிக்க உள்ளார். தல அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு முதலில் விக்னேஷ் சிவனுக்கு கிடைத்தது. அதன் பின் தயாரிப்பு தரப்பிலிருந்து ஏற்பட்ட சில சலசலப்பின் காரணமாக அந்த படத்தின் வாய்ப்புகள் கைவிடப்பட்டது. அதை தொடர்ந்து சில மாதம் இடைவெளி எடுத்துக் கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்பொழுது பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து படம் இயக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜைகள் மிக பிரம்மாண்டமாக துவங்கிய நிலையில் இந்த படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரிலீசுக்கு முன்பே 250 கோடி பிசினஸ் செய்த அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்!

மேலும் இந்த திரைப்படம் லவ் டுடே படத்தை போன்று காதல் மற்றும் டெக்னாலஜியை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டு இருக்கும் எனவும் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக ஹீரோ பிரதீப் பல சிகிச்சைகள் எடுத்து வருவதாகவும் இதன் மூலம் தனது இயல்பான நிறத்தை விட சற்று கூடுதலாக பளபளவென தோன்றுவதற்காக பல முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் பிரதீப் 15 கோடி வரை சம்பளம் பேசியுள்ளதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரதீப் 2020 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அடுத்த ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக யாரும் எதிர்பார்க்காத அளவு மிகப்பெரிய நடிகை ஒன்று நடிக்க இருப்பதாகவும், இந்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த படத்தை மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பதற்கு 10 கோடி வரை சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதீப்பின் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த சம்பளம் குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்த குறுக்கிடும் செய்ய வில்லை எனவும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.