எல்லாமே ஸ்ட்ராட்டஜி!.. ஓவர் சீன் போட்ட பிரதீப் ஆண்டனி.. ரெட் கார்டு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிய கமல்?

எல்லாமே ஸ்ட்ராட்டஜி!.. ஓவர் சீன் போட்ட பிரதீப் ஆண்டனி.. ரெட் கார்டு கொடுத்து வீட்டுக்கு அனுபிய கமல்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் லீக் ஆகி உள்ளன. கடந்த வாரம் 5 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்த நிலையில், டபுள் எவிக்‌ஷன் செய்யப்பட்டு வினுஷா மற்றும் யுகேந்திரன் வெளியேறினர். இந்நிலையில், இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன் இருக்குமா என எதிர்பார்த்த நிலையில், சனிக்கிழமை ஒருவரும், ஞாயிற்றுக்கிழமை ஒருவரும் வெளியேறப்போவதாக தெரிகிறது.

பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு

இந்த சீசனின் டைட்டில் வின்னரே பிரதீப் ஆண்டனி தான் என்கிற அளவுக்கு அவரே ஓவர் பில்டப் கொடுத்து பர்ஃபார்ம் செய்து வந்த நிலையில், ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸும் ஒன்று கூடி மிக்சர்கள் எல்லாம் வீட்டில் ஜாலியா இருக்க இடையூறாக இருக்கும் பிரதீப் ஆண்டனியை முதல் நபராக வெளியேற்றுவோம் என வெளியேற்றி உள்ளனர்.

பிரதீப் ஆண்டனி இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆவார் என பிக் பாஸ் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து அதிரடியாக பிரதீப் ஆண்டனியை வெளியே அனுப்பப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன.

போட்டியாளர்கள் புகார்

பூர்ணிமா ரவி, ஜோவிகா, நிக்சன், மணிகண்டன் மற்றும் ரவீனா தாஹா என பிக் பாஸ் வீட்டில் உள்ள பல போட்டியாளர்கள் பிரதீப் ஆண்டனி பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைக்க அதை பார்த்த உலகநாயகன் தம்பி நீ இனிமே உள்ளே விளையாட தகுதி இல்லை என வெளியேற்றி விட்டாதாக கூறுகின்றனர்.

ரெட் கார்டு கொடுத்து அதிரடியாக பிரதீப் ஆண்டனி நீக்கப்பட்ட நிலையில், இது ரொம்ப மோசம் என்றும் அவருக்கு ஏதாவது தண்டனை வழங்கி இருக்கலாம். ஆட்டத்தில் இருந்து தூக்குவது தவறான ஒன்று என பிரதீப் ஆண்டனியின் பிஆர் டீம் புலம்பி வருகிறது. பிரதீப் சொல்வது போல பிக் பாஸ் கேம் இந்த வாரமாவது சூடுபிடிக்க இதுவும் ஒரு ஸ்ட்ரட்டஜி தான் என்றும் இந்த சீசனில் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகாவுக்குத் தான் டைட்டிலை கொடுக்கப் போறாங்க என்றும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews