அனுஷ்கா படத்தில் இணைந்த பிரபுதேவா?.. கேரளாவுக்கு சென்ற இடத்தில் சூப்பர் சான்ஸ்!..

தமிழ் சினிமாவில் நடன ஆசிரியர், நடிகர், இயக்குநர் என பன்முக தன்மை கொண்டவர் பிரபுதேவா. தலைச்சிறந்த நடன கலைஞர்களே வியக்கும் அளவிற்கு தனது நடனத்தினால் புகழ் பெற்றவர். உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற பெயரில் நடன ஷோ நடத்தும் அளவிற்கு நடனத்தில் உச்சம் தொட்டவர். காதலன், மின்சார கனவு, குலேபகாவலி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

கேரளாவில் பிரபுதேவா:

போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். போக்கிரி, வில்லு படங்களை விஜயை வைத்து இயக்கியிருப்பார். போக்கிரி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. வில்லு படம் அவ்வாறு இல்லாமல் படு தோல்வி அடைந்தது.

தற்போது தளபதி விஜய் நடிப்பில் பிரபல இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். இந்த படத்தில் விஜயுடன் இணைத்து நடிகர் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், மோகன், மீனாட்சி சௌதிரி போன்ற பலர் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தில் சில காட்சிகளை இலங்கையில் படமாக்க திட்டமிட்டிருந்தார் இயக்குநர் வெங்கட்பிரபு. இலங்கையில் படம் பிடிப்பு மேற்கொள்ள இயலாததால் அந்த ஷெட்டியூலை கேளராவிற்கு மாற்றியுள்ளனர். படப்பிடிப்பிற்காக பிரபுதேவா கேரளா சென்றிருந்தார். அங்கு சோட்டானிக்கர பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்த நடிகர் பிரபுதேவாவின் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அப்போது பிரபுதேவாவுக்கு தெரியாது சோட்டானிக்கர பகவதி அம்மனை தரிசித்தவுடன் தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று.

அனுஷ்கா படத்தில் வாய்ப்பு:

அருந்ததி, ருத்திரமாதேவி, தாண்டவம், சிங்கம், பாகுபலி போன்ற படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு என்று இரண்டு திரையுலகிலும் பிரபலமாகவுள்ள நடிகை அனுஷ்கா. அவர் தற்போது மலையாளத்தில் முதல் முறையாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். காத்தனார் என்று பெயரிடப்பட்ட அந்த படமும் கேரளாவில் தான் படமாக்கப்படுகிறது. இந்நிலையில் பிரபுதேவாவும் காத்தனார் படத்தில் இணைந்துள்ளார். அந்த படத்தின் படக்குழுவினர் அவரை வரவேற்ற புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கோட் படத்தின் படப்பிடிப்புக்காக சென்ற நடிகர் பிரபுதேவாவுக்கு மலையாள படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாரா? அல்லது குணசித்ர கதாபாத்திரமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...