இன்று ஐப்பசி மாத பெளர்ணமி- சிவனுக்குரிய அன்னாபிஷேகம்

இன்று ஐப்பசி மாதம் வரும் பெளர்ணமி தினமாகும். உலகெங்கும் இருக்கும் சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அன்னாபிஷேகம் மிகவும் விசேஷமான ஒன்றாகும்.

உலகத்தை படைத்து அதை வழிநடத்துபவன் இறைவனான சிவபெருமான். அனைத்து உயிர்களும் அவனின் சக்தியாலேயே இயங்குகிறது.

தனது சக்தியை அனைத்து உயிர்களுக்கும் கொடுப்பது மட்டுமல்லாமல், அனைத்து உயிர்களுக்கும் தேவையான உணவை ஏதோ ஒரு வழியில் வழங்குபவனும் அவனே.

காக்கை, பூனை, நாய், மனிதர் பறவைகள், பாம்பு என அனைத்திற்கும் உணவு கிடைப்பதால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கின்றன.

அனைத்து உயிர்களையும் உணவு கொடுத்து காக்கும் சிவபெருமானை போற்றியே பெளர்ணமி மாத அன்னாபிஷேக விழா நடைபெறுகிறது.

இன்று அனைத்து சிவன் கோவில்களிலும் சிவனுக்கு என்று சாதம் வடித்து அதை வைத்து மூலவர் சிவனை அலங்காரம் செய்து இருப்பார்கள்.

இன்றைய நாளில் கோவில் சென்று அனைத்து உயிர்களுக்கும் உணவு கிடைத்து அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என வேண்டிக்கொள்வது நமக்கு நன்மையை பயக்கும்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print