தமிழ் ராக்கர்ஸில் ‘பொன்மகள் வந்தாள்: சூர்யா, ஜோதிகா அதிர்ச்சி



ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிப்பில் ஜெஜெ பெடரிக் இயக்கிய ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் இன்று முதல் அமேசான் பிரைமில் வெளிவந்துள்ள நிலையில் வெளியான ஒருசில நிமிடங்களில் இந்த படம் தமிழ் ராக்கர்ஸ் தன்னுடைய இணையதளத்தில் HD தரத்தில் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்த படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, நாயகி ஜோதிகா ஆகியோர் அதிர்ச்சி அடைந்திருப்பதகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க அவர்கள் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது

கடந்த சில ஆண்டுகளாக திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்களையே ஒரு சில மணி நேரத்தில் தியேட்டர் பிரிண்ட்டாகவும், ஒரு சில நாட்களில் HD பிரிண்டாகவும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டு வருவது திரையுலகினர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது

இந்த நிலையில் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் ரிலீஸ் செய்துள்ளதால், திரையுலகினர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமேசானும் ஒத்துழைக்கும் என கூறப்படுகிறது

Published by
Staff

Recent Posts