தயவுசெய்து இதை யாரும் பண்ணாதீங்க… வருத்தத்துடன் இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட பிக்பாஸ் அர்ச்சனா…

அர்ச்சனா ரவிச்சந்திரன் சின்னத்திரை சன் டிவியில் வீடியோ ஜாக்கியாக தனது பயணத்தை ஆரம்பித்தார். அது தவிர ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். அதைத் தொடர்ந்து அர்ச்சனாவுக்கு விஜய் டிவியில் வாய்ப்புக் கிடைத்து.

விஜய் டிவியின் தொடரான ‘ராஜா ராணி 2’ வில் ஆலியா மானசாவுடன் இணைந்து அர்ச்சனா நடித்திருந்தார். இந்த தொடரில் அர்ச்சனாவுக்கு வில்லி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

அடுத்ததாக கடந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 7 இல் வைல்ட்கார்ட் போட்டியாளராக கலந்துக் கொண்டு பேரும் புகழும் அடைந்தார். பிக் பாஸ் பிரதீப்பிற்கு நடந்த அநியாயத்தை தட்டி கேட்டு சக போட்டியார்களின் எதிர்ப்பை தைரியமாக கையாண்டு மக்களின் முழு ஆதரவோடு அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆனார். இந்தியாவிலேயே வைல்ட்கார்ட் போட்டியாளராக பிக்பாஸில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற முதல் பெண் அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆவார்.

இந்நிலையில், அர்ச்சனா ரவிச்சந்திரன் சைபர் புல்லியிங் பற்றி வருத்தத்துடன் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் கூறியது என்னவென்றால், உத்திரபிரதேசத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். அவரை திறமையை பற்றி பேசி பாராட்டாமல் அவரின் தோற்றத்தை கேலி செய்துள்ளார்கள்.

இப்படி சைபர் புல்லியிங் செய்வது பார்த்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இதை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். நம் சமூகத்தில் இருந்து இந்த மாதிரி விஷயங்களை இல்லாமல் செய்ய வேண்டும். இந்த மாதிரி மக்கள் தயவுசெய்து யாரையும் சைபர் புல்லியிங் பண்ணாதீங்க என்று கூறியுள்ளர் பிக்பாஸ் அர்ச்சனா ரவிச்சந்திரன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...