லேட்டாக வந்த எஸ்.பி.பி. கிடைத்த கேப்பில் வாய்ப்பைப் பெற்ற பாடகர் மனோ..

நீங்கள் திரையில் ஒரு பாடலை மிகவும் ரசித்துப் பார்க்கிறீர்கள் என்றால் அந்தப் பாடலைப் பாடியது எஸ்.பி.பி யா அல்லது மனோவா என்ற சந்தேகம் எழும். அந்த அளவிற்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தைப் போலவே குரல் வளம் கொண்ட ஒரு பின்னணிப் பாடகர்தான் மனோ. ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் அடிப்படையில் ஓர் இஸ்லாமியர். இசைஞானி இளையராஜா இவரது இயற்பெயரான நாகூர் பாபு என்பதை மாற்றி மனோ என்று வைத்தார்.

இவருக்கு ஆரம்ப காலங்களில் சினிமாவில் நடிப்பதற்காகத் தான் திரைத்துறையைத் தேர்ந்தெடுத்தார். ஆரம்பத்தில் சென்னைக்கு சினிமாவில் நடிப்பதற்காக தான் வாய்ப்பு தேடி வந்த மனோ ஒரு ஹோட்டலில் 30 ரூபாய் சம்பளத்தில் பாடல்கள் பாடுவாராம். முதன் முதலாக ஒரு தெலுங்கு படத்தில் ஒரு காட்சியில் நடிப்பதற்காக மனோவிற்கு வாய்ப்பு கிடைக்கவும் மேலும் அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பாடுவது போன்று இருந்திருக்கிறது.

சம்பவம் செய்த தனுஷ்.. போட்டியிட்ட மற்ற படங்களை அடித்து தூள் கிளப்பிய கேப்டன் மில்லர்

அந்தப் பாடலைப் பாட வேண்டியவர் எஸ்.பி.பி. ஆனால் அன்று அவர் வர இயலவில்லை. எனவே அந்த படத்திற்காக இசையமைப்பாளராக இருந்த எம்.எஸ்.வி யிடம் மனோ, “சார் எனக்கு கொஞ்சம் பாட தெரியும்“ என்று கூற அவர் பாடலை சொல்லிக் கொடுத்து பாடுங்க பார்ப்போம் என்று கேட்டிருக்கிறார். அப்போது எம்.எஸ்.வியே வியக்கும்படி மனோ பாடி முடித்திருக்கிறார். அதை பார்த்த எஸ்.பி.பி பிறகு மனோவை அவரது உதவியாளராக சேர்த்திருக்கிறார்.

தொடர்ந்து வாய்ப்புகள் வரவே தனது முதல் சினிமா பாடல் குரலை எஸ்.பி.பி., சுசீலாவுடன் இணைந்து தெலுங்குப் படத்தில் பாடினார். இவரது திறமையை அறிந்த இளையராஜா தமிழில் பூவிழி வாசலிலே படத்தில் முதன் முதலாக பாட வாய்ப்புக் கொடுத்தார். அதன்பின் ராமராஜன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் செண்பகமே செண்பகமே பாடலையும், மதுர மரிக்கொழுந்து வாசம் பாடலையும் பாட பட்டிதொட்டியெங்கும் மனோவின் குரல் ஒலித்தது.

அதன்பின் இன்றளவும் முன்னணிப் பின்னணிப் பாடகராக வலம் வருகிறார். பாடுவது எஸ்.பி.பி-ஆ அல்லது மனோவா என்று சந்தேகிக்கும் அளவிற்கு அவரது குரலுடன் மனோவின் குரல் ஒத்துப் போகும். ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் பாடிய முக்காலா பாடல் இளைஞர்களின் உற்சாகப் பாடலாக இன்றும் திகழ்கிறது. மனோ தெலுங்கு, தமிழ், ஒரியா, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 15 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.

சின்னத்தம்பி படத்தில் இவர் பாடிய தூளியிலே ஆட வந்த பாடல் என்றம் மனதிற்கு அமைதி தரும் தாலாட்டுப் பாடலாக குழந்தைகளை உறங்க வைக்கிறது. மேலும் மனா ரஜினிக்கு தெலுங்கு மொழியில் பல படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
John

Recent Posts