கிரக ரீதியாக ஒவ்வொரு நாளும் அணிய வேண்டிய ஆடைகள்

கிரக ரீதியாக ஒவ்வொரு நாளும் ஒரு ஆடை அணியலாம். அவை நமக்கு சில அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெற்றுத்தரலாம்.

ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்த நாள் சூரியனுக்கு உகந்த மஞ்சள் மற்றும் ஆரஞ்சு , சிவப்பு நிற உடைகளை அணிந்தால் நலமாகும்.

திங்கட்கிழமை சந்திர பகவானுக்குரிய நாள் இந்த நாளில் வெண்மையான உடைகள் மற்றும் சில்வர் நிற உடைகளை அணியலாம். சிவபெருமானுக்கு உகந்த நாள் இது அதனால் ஊதா நிறத்தையும் அணியலாம்.

செவ்வாய்க்கிழமை அன்று சிகப்பு நிற உடை அணியலாம். சிகப்பு நிற உடையணிவது செவ்வாய்க்கு உரிய பலம் சேர்க்கும் செவ்வாயால் ஏற்படும் சாதகங்களை அதிகரித்து பாதகத்தை குறைக்கும்.

புதன்கிழமையன்று பச்சை நிற உடையணிவது மிகுந்த சிறப்பை சேர்க்கும். பச்சை நிறம் அணிந்தால் புதன் பகவானின் ஆசியை பெற்றுத்தரும்.

வியாழக்கிழமை அன்று குருவுக்குரிய மஞ்சள் நிற உடைகள் அணிவது மிகுந்த சிறப்பைத்தரும் .

அதேபோல் வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர பகவானின் ஆசியை பெற வெள்ளை நிற உடையணிய வேண்டும். இதனால் சுக்கிர பகவானால் ஏற்படும் சகல சம்பத்துகளும் கிடைக்கும்.

இதே போல் சனிக்கிழமை அன்று கருப்பு நிற உடையணிவது சனி பகவானின் நன்மையை பெற்றுத்தரும்.

நடைமுறையில் இது போல பார்த்து பார்த்து உடையணிவது கஷ்டமாக இருந்தாலும் தினம் தோறும் செய்து வந்தால் சிறப்பு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews