நாத்திக தலைவர்களுக்கு நடந்த கடவுள் நம்பிக்கை சம்பவங்கள்.. ஆத்திகராக பெரியார், அண்ணா ரியாக்சன்

தந்தை பெரியார் என்றாலே நினைவுக்கு வருவது சமுதாயத்தில் மூட நம்பிக்கைக்கு எதிரான அவரது கருத்துக்களும், கடவுள் மறுப்புக் கொள்கைகளும் தான். இவரைப் பின்பற்றியே அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் திராவிடக் கொள்கைகளில் வேரூன்றி இருந்தனர். தந்தை பெரியார் தன்னுடைய இளம் வயதில் இந்து மத பழக்க வழக்கங்களில் ஈடுபாடு கொண்டவராகவே விளங்கியிருக்கிறார். ஒருமுறை காசிக்குச் சென்று அங்கு சில காலம் செலவிட்டவர் அங்கு மதத்தின் பெயரில் நடக்கும் மோசடிகள், மூட நம்பிக்கைகளைப் பார்த்து மனம் வெகுண்டு நாத்திகரானார் என்பது வரலாறு. பெரியாரைப் பற்றிச் சொல்லும் போது காசிக்குச் செல்லும் போது ஆத்திகர், திரும்பி வரும்போது ஆத்திகர் என்று கூறுவதுண்டு.

இப்படி கடவுள் மறுப்புக் கொள்கைகளில் ஊறிப்போன பெரியாருக்கும், அவரது சீடரான அறிஞர் அண்ணாவிற்கும் அவர்கள் உச்சத்தில் இருந்த போது இரு சம்பவங்கள் நடந்துள்ளது. முதலாவதாக தந்தை பெரியார் அவர்கள் ஒருமுறை கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் பொதுக்கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டார். கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவராயின் அவர் வரும் முன்பே கடவுள் வாழ்த்து பாடி முடிக்க திட்டமிட்டனர். ஆனால் அதற்கு முன்பே பெரியார் விழாவிற்கு வந்துவிட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடவுள் வாழ்த்து பாடுவதென முடிவெடுத்து சபையில் கடவுள் வாழ்த்து பாட அனைவரும் எழுந்து நிற்க பெரியாரும் சபை மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றார். இப்படி தன்னுடைய கொள்கை இருந்த போதும் அடுத்தவர்கள் மனதை புண்படுத்தாமல் பெரியார் நடந்து கொண்டார்.

‘த’ கர வரிசையில் எழுதப்பட்ட செய்யுள்… கண்ணதாசன் செய்த மேஜிக்-ஆல் சூப்பர் ஹிட் பாடலான அதிசயம்!

இதற்கு அடுத்ததாக அறிஞர் அண்ணாவிற்கும் இது போன்றதொரு சம்பவம் நடைபெற்றது. அண்ணா முதல்வராக இருந்தபோது புற்று நோயால் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றி இருந்தார். அண்ணாவின் மனைவி அவருக்காக வேண்டாத கோவில்கள் இல்லை. மேலும் அவர் படுக்கையில் இருந்த போது ஆத்திகரான கவியோகி சுத்தானந்த பாரதியார் அவரைப் பார்க்க வந்துள்ளார். அப்போது அண்ணாவின் நிலை கண்டு தடுமாறி கலங்கி நின்றார். இருவரும் தமிழின்மேல் அளவற்ற பற்று கொண்டவர்கள். அண்ணாவை பார்த்த சுத்தானந்த பாரதியார் தனது விபூதி பையில் இருந்து சிறிது திருநீறைக் கையில் எடுத்தார். நாத்திகரான அண்ணா என்ன சொல்வாரோ என்று தயக்கத்துடன் அவரைப் பார்க்க அண்ணா தலையை உயர்த்த அவரது நெற்றியில் திருநீறு பூசியிருக்கிறார் கவிஞர்.

மேலும் தான் எழுதிய கதைகளில் நாத்திக கருத்துக்களை அதிகம் புகுத்திய அண்ணா தியாகராஜ பாகவதருக்காக ‘சொர்க்க வாசல்’ என்ற கதையையும் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த படத்தில் தீவிர கடவுள் பக்தரான பாகவதர் நடிக்கவில்லை. காரணம் அதில் நாத்திக கருத்துக்கள் அதிகம் இடம் பெற்றதால் அவருக்குப் பதிலாக கே.ஆர். ராமசாமி என்பவர் நடித்தார் என்பது வரலாறு.

Published by
John

Recent Posts