மக்களின் ஆர்வம் இந்தப் படத்தை விரைவில் ரீ- ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தூண்டியது… லிங்குசாமி உருக்கம்…

லிங்குசாமி, தமிழ் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். 2001 ஆம் ஆண்டு நடிகர் மம்முட்டி நடித்த ‘ஆனந்தம்’ திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நிஜ வாழ்க்கையை வைத்து உருவான ‘ஆனந்தம்’ திரைப்படம் நல்ல விமர்சங்களை பெற்றது. மேலும் பல விருதுகளையும் பெற்றது. தனது முதல் படத்தின் மூலமாக அனைவரின் கவனத்தை ஈர்த்தார் லிங்குசாமி.

அடுத்ததாக 2002 ஆம் ஆண்டு ‘ரன்’, 2005 ஆம் ஆண்டு ‘சண்டக்கோழி’, 2010 ஆம் ஆண்டு ‘பையா’, 2012 ஆம் ஆண்டு ‘வேட்டை’ போன்ற படங்களை இயக்கினார். நடிகர் விஷால் நடித்திருந்த ‘சண்டக்கோழி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது. நடிகர் விஷாலுக்கும் அந்த திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம்.

இயக்குனர் லிங்குசாமி இயக்கிய படங்களில் 2012 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் மற்றும் நடிகர் ஆர்யா நடித்து வெளியான ‘வேட்டை’ திரைப்படம் ஓரளவு நல்ல விமர்சங்களைப் பெற்றது. அதன் பின்பு 2014 இல் நடிகர் சூர்யா மற்றும் நடிகை சமந்தாவை வைத்து இயக்கிய ‘அஞ்சான்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்து சற்று தோல்வியை சந்தித்தது.

அடுத்ததாக 2010 ஆம் ஆண்டு லிங்குசாமி தயாரித்து இயக்கிய, நடிகர் கார்த்தி மற்றும் நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ‘பையா’ திரைப்படம் நல்ல வரவேப்பைப் பெற்று மாபெரும் வெற்றிப் பெற்றது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. ‘பையா’ படத்தின் அனைத்து பாடல்களும் மெகாஹிட்டானது.

இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி தற்போது கொடுத்த பேட்டி ஒன்றில் ‘பையா’ திரைப்படத்தைப் பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது என்னவென்றால், சமீபத்தில் உலக தியேட்டர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு எந்த படம் தியேட்டரில் ஸ்பெஷலாக திரையிட வேண்டும் என்று எடுத்த கருத்து கணிப்பில் ‘பையா’ திரைப்படம் வெற்றிப் பெற்றது. அதன்படி கமலா தியேட்டரில் ‘பையா’ படம் திரையிடப்பட்டது. நானும் அங்கு சென்றிருந்தேன்.

அப்போது மக்கள் ‘பையா’ திரைப்படத்திற்கு கொடுத்த ஆரவாரம் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. என் பக்கத்தில் இருந்தவர் ‘பையா’ திரைப்படத்தை நான் 60 முறை பார்த்தேன் என்று சொல்லி என்னை ஆச்சர்யப்பட வைத்துவிட்டார். இந்த நிகழ்விற்கு பிறகு ‘பையா’ திரைப்படத்தை விரைவில் ரீ- ரிலீஸ் செய்ய வேண்டும் என்று என்னை தூண்டியது. ‘சண்டக்கோழி’ திரைப்படத்தையும் ரீ- ரிலீஸ் செய்யலாம் என்று நினைக்கிறேன், அதற்காக நடிகர் விஷாலிடம் பேச இருக்கிறேன் என்று உருக்கமாக பேசியிருந்தார் இயக்குனர் லிங்குசாமி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.