பெண்களை பற்றி சில தகவல்கள்..



உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலம் ஒரு தாய், முழு  பெண்ணாகிறாள். ”அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண்” இதை சொன்னவர் சுஷ்மிதா சென், பிரபஞ்ச அழகி போட்டியின் கடைசிச் சுற்றில். இந்த பதில்தான் அவரை பிரபஞ்ச அழகியாக்கியது.

நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் உள்ள தொடர்புகள் அதிகம் என்றும் அதனால் பெண்கள் வளர்ச்சிக்கு ஒவ்வொரு அரசும் பாடுபடவேண்டும் என்றும் பல்வேறு அறிஞர்கள் தொடந்து கூறி வந்துள்ளார்கள், கூறியும் வருகிறார்கள். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்கும் என்றும் பெண்களே இவ்வுலகின் கண்கள் எனவும் முண்டாசுக் கவிஞன் பாரதி முழங்கினான். இது எல்லா நாட்டுக்கும் பொருந்தும்!


பெண்களை பற்றி சில தகவல்கள்…

உலகில் உள்ள ஏறத்தாழ 3 கோடி அகதிகளில் 80 முதல் 85 சதவித்தினர் பெண்கள். தினமும் உலகம் முழுக்க பிரசவத்தின்போது 1,600 பெண்கள் மரணமடைகிறார்கள். ஸ்வீடன், கனடா, நார்வே, அமெரிக்கா, பின்லாந்துப் பெண்கள் ஆயுள், கல்வி, வருமானம் முதலியவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடுகளில் முதன்மை பெறுவது நியூசிலாந்து. 1893-ஆம் ஆண்டிலிருந்து அங்கு பெண்கள் ஓட்டளித்து வருகிறார்கள். இதுவரை உலகில் 28 பெண்களே நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தியுள்ளனர். சர்வதேச நாடாளுமன்றங்களில் இதுவரை 14.1 சதவீதத்துக்கு மேல் பெண்கள் இடம் பெற்றுள்ளார்கள். ஸ்வீடனில் 1995-இல் அமைச்சரவையில் பெண்கள் சமவிகிதத்தில் இடம் பெற்றனர். அன்று தொடங்கிய போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது! காலத்தின் தேவைக்கேற்ப மகளிர் எதிர்கொள்ளும் சவால்களை முன் வைத்துப் போராடி வருகின்றனர்..

பெண்ணினை போற்றுவோம். பெண்மையை மதிப்போம்!!

Published by
Staff

Recent Posts