பன்னீர் வைத்து ஸ்வீட் செய்யலாமா.. வாங்க பன்னீர் பால் கொழுக்கட்டை ரெசிபி இதோ

பொதுவாக பன்னீர் வைத்து பன்னீர் மசாலா, பன்னீர் பிரியாணி, பன்னீர் புலாவ், பன்னீர் 65 என பலவிதமான ரெசிபிகள் செய்து பார்த்துள்ளோம் ஆனால் இந்த முறை புதிதாக பன்னீர் வைத்து ஒரு ஸ்வீட் ரெசிபி செய்யலாம் வாங்க. பன்னீர் பால் கொழுக்கட்டை செய்து பார்க்கலாம். கொழுக்கட்டை அனைவருக்கும் பிடித்தமான ஒரு பாரம்பரிய பலகாரம். அதில் சற்று புதுமையாக பன்னீர் சேர்த்து சுவையான கொழுக்கட்டை எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

செய்ய தேவையான பொருட்கள்

அரிசி மாவு – ஒரு கப்

பன்னீர் – இரண்டு கப்

பால் – இரண்டு கப்

துருவிய தேங்காய் – கால் கப்

ஏலக்காய் – 5

சர்க்கரை – ஒரு கப்

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு கப் தண்ணீரை பொடியாக துருவி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அந்த தண்ணீரை அரிசி மாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சிறிது சிறிதாக தண்ணீரை அரிசி மாவில் சேர்க்க வேண்டும் இல்லை என்றால் மாவு கட்டியாக மாறி இறுகி விடும். இப்பொழுது தண்ணீர் நன்கு சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிணைந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அடி கனமான பாத்திரத்தில் நாம் பால் சேர்த்து சூடாக்க வேண்டும். பால் நன்கு கொதித்ததும் நாம் அரிசி மாவு உருண்டைகளாக செய்து அந்த பாலினுள் சேர்க்க வேண்டும்.

மோமோஸ் வாங்க நீ கடைக்கு போக வேண்டாம்… வீட்டிலே வெஜிடபிள் மோமோஸ் செய்து சாப்பிடலாம் வாங்க..

மிதமான தீயில் இந்த உருண்டைகளை வேக வைக்க வேண்டும். அரிசி மாவு உருண்டை வெந்ததும் பாலில் இருந்து மேல் எழும்பி மிதக்கத் துவங்கும்.

அப்போது நாம் சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை சேர்த்து நன்கு கிளறியதும், அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதை ஒரு ஐந்து நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். அதன் பின் மற்றொரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறலாம் இப்பொழுது சுவையான பன்னீர் பால் கொழுக்கட்டை தயார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews