பாண்டியராஜிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட ஷங்கர்.. அட அந்தப் படத்துக்காகவா..?

இயக்குனர் பாண்டியராஜ் தமிழ் சினிமா வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர். சிவகார்த்திகேயன்,சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியிருந்தாலும் தனக்கான தனி ஒரு பதிப்பை பதிக்க நீண்ட காலமாக போராடும் இயக்குனர்.

இவரது படங்கள் ஒரு மனிதனுடைய எதார்த்த வாழ்க்கையை அப்படியே திரையில் பிரதிபலிப்பது தான். அப்படி இவர் முதல் முதலில் இயற்றிய திரைப்படம் ‘பசங்க’. இதில் விமல் ஹீரோவாக நடித்திருப்பார். என்னதான் விமல் ஹீரோவானாலும் அதில் முக்கிய கதாபாத்திரங்களில் நான்கு சிறுவர்கள் நடித்திருப்பர்.

அவர்களை இப்படத்தின் உயிர் நாடி என்று சொல்லலாம். முதலில் இப்படத்தை எடுப்பதற்காக தயாரிப்பாளர் தேடிக் கொண்டிருக்கையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்பொழுது பசங்க திரைப்படத்தின் கதையை இயக்குனர் சங்கரிடம் விவரிக்கிறார். கதை கேட்டுக் கொண்டிருக்கையில் கதையின் ஓட்டத்தில் பயணித்து 33 இடங்களில் சிரித்து ரசித்துள்ளார் சங்கர். இதை நன்றாக கவனித்த இயக்குனர் பாண்டியராஜ் சங்கர் சாருக்கு கதை பிடித்து விட்டது அதனால் எனக்கு தயாரிப்பாளர் கிடைத்து விட்டார் என்ற சந்தோசத்தில் வீடு திரும்பி உள்ளார்.

நீண்ட நாட்கள் கழித்தும் ஷங்கரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. பொறுத்திருந்த பாண்டியராஜ் அவருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். ஆனால் அவர் எதிர்பாராதவிதமாக ஷங்கர் அந்த சமயத்தில் கதை சரியில்லை என்று படத்தை தயாரிக்க வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். பின்னர் இயக்குனர், நடிகர் என்ற பன்முக திறமைக்கு சொந்தக்காரர் சசிகுமார் இப்படத்தை தயாரித்தார். படம் வெளியாகி மக்களிடையே பிரமாண்ட வரவேற்பு பெற்று வெற்றி அடைந்தது.

மேலும் இப்படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது. இதை அறிந்த சங்கர் தொலைபேசி மூலம் பாண்டியராஜிடம் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். “இந்தப் படத்தின் கதையா என்னிடம் சொன்னீங்க, தப்பாக ஜட்ஜ் பண்ணிட்டேன் பாண்டியராஜ், சாரி” என்றும் “படத்தை நான் தான் தயாரித்திருக்க வேண்டும் மிஸ் பண்ணிட்டேன்” என்று வருந்தி பேசியதாக சித்ரா லட்சுமணன் பேட்டியில் இயக்குனர் பாண்டியராஜ் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.