பழனி பஞ்சாமிர்தத்துக்கு கிடைத்த உயரிய உலக அங்கீகாரம்

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு புகழ் இருப்பது போல இவ்வூருக்கு புகழ்பெற்றது பழனி மலைக்கோவிலும், கோவிலில் அபிசேகம் செய்து கொடுக்கப்படும் பஞ்சாமிர்தமும்.


மலை வாழை, பேரீச்சை, நெய், நாட்டுச்சர்க்கரை கலந்து மிக சுவையாக இனிக்க இனிக்க மணக்க மணக்க தயாரிக்கப்படுகிறது பழனி பஞ்சாமிர்தம்.

இந்தப் பஞ்சாமிர்தத்துக்குப் புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்த பஞ்சாமிர்தத்துக்கு போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் உள்ள உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு புவிசார் குறியீட்டை வழங்கியுள்ளது. ஏற்கெனவே காஞ்சிபுரம் பட்டுச் சேலை, தஞ்சாவூர் தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லி மதுரை சுங்குடி சேலை, சேலம் மாம்பழம், தஞ்சாவூர் பாணி ஓவியங்கள், பத்தமடைப் பாய் ஆகியவை புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வெள்ளைப்பூண்டுக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் தான் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் தற்போது பழனி கோவில பஞ்சாமிர்தத்துக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Published by
Staff

Recent Posts