”தலைவர் ரஜினிகாந்த்”!.. இது பனையூர் இல்லப்பா பாகிஸ்தான்.. கிரிக்கெட் வீரரின் தரமான சம்பவம்!..

தமிழ் சினிமா நடிகர்களிலேயே உலக அளவில் அதிகமான ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தான் உள்ளது. தமிழ்நாட்டை தாண்டியும், இந்தியாவை தாண்டியும், பல்வேறு உலக நாடுகளிலும் நடிகர் ரஜினிகாந்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளன. அதன் விளைவுதான் இந்தியாவைப் போலவே ஓவர் சீஸிலும் ரஜினிகாந்தின் படங்களுக்கு மிகப்பெரிய வசூல் குவிந்து வருகிறது.

உலகளவில் சாதித்த ஜெயிலர்

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் அதிகபட்சமாக 600 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியது. இதில் பாதிக்குப் பாதி சுமார் 300 கோடி ரூபாய் வசூலை வெளிநாடு வாழ் ரசிகர்கள் மூலமாகவே வசூல் செய்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்த அளவுக்கு மற்ற எந்த ஒரு கோலிவுட் நடிகர்களுக்கும் அப்ராட் ரசிகர்கள் இல்லை என்றே சொல்லலாம். மலேசியா, ஜப்பான், அமெரிக்கா, தாய்லாந்து, நார்வே, ஓமன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து ரஜினி ரசிகர்களின் வீடியோக்களும் புகைப்படங்களும், புதிய படங்கள் வந்தால் தியேட்டர்களில் கூட்டம் கூட்டமாக அவர்கள் குவியும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கே தலைவர்

இந்நிலையில், சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவரிடம் உங்களுக்கு பிடித்த இந்திய நடிகர் யார் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்ட நிலையில், ஷாருக்கான் உள்ளிட்ட எந்த ஒரு பாலிவுட் நடிகரின் பெயரையும் சொல்லாமல் “ தலைவர் ரஜினிகாந்த்” என சட்டென ரஜினி ஸ்டைலுடன் சொல்லி அசத்திவிட்டார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் அசாம் கான் தான் சமீபத்தில், சூப்பர் ஸ்டாரை போலவே கண்ணாடி போடுவது போல ஆக்ஷன் செய்து ரஜினிகாந்த் தான் தனக்கு பிடித்த நடிகர் என்பதை கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் ஷேர் செய்து இது பனையூரில் விஜய்க்கு வரும் ரசிகர்கள் கூட்டமல்ல பாகிஸ்தானில் இருந்து கிரிக்கெட் வீரர் தனது மனதார சொன்ன விஷயம் என ஷேர் செய்து விஜய் ரசிகர்களை வம்பிழுத்து வருகின்றனர்.

தலைவர் 170, 171 சம்பவம்

ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் மிகப் பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில் அடுத்ததாக லால் சலாம் படத்திற்காக ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதன் பின்னர், ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள தலைவர் 170 படம் தரமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தலைவர் 171 படத்திற்கு மீண்டும் சன் பிக்சர்ஸ் உடன் கைகோர்த்துள்ள ரஜினிகாந்த் இயக்குனராக லோகேஷ் கனகராஜை தேர்வு செய்துள்ளார்.

லியோ படத்திற்கு பிறகு தலைவர் 171 படம் மிகப்பெரிய சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர்கள் தேர்வில் விஜய் மற்றும் சூர்யா படங்களை இயக்கியவர்கள் உடன் கூட்டணி வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நல்ல திறமை வாய்ந்த இயக்குனர்களை கண்டறிந்து அவர்களிடம் கதை கேட்டு கண்டிப்பாக தனது ரசிகர்களுக்கு இனிமேல் ஹிட் படங்களை மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்கிற முடிவுடன் சூப்பர் ஸ்டார் இருப்பது தெரிய வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews