பத்மினி கன்னத்தில் அடித்த அடி.. காய்ச்சல் வந்து தவித்த சிவாஜி.. கூடவே ஒரு செம சர்ப்ரைஸும் நடந்துச்சு..

தனது ஆகப்பெரும் நடிப்பு திறமையால் தமிழ் சினிமாவையே ஒரு காலத்தில் கட்டி ஆண்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். முதல் படமான பராசக்தியிலேயே இப்படி கூட வசனங்கள் பேசி நடிக்கலாம் என முற்றிலும் ஒரு புதிய பரிமாணத்தில் நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்த சிவாஜி, அதன் பின்னர் தொட்டதெல்லாம் தங்கம் தான்.

எம்ஜிஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சிவாஜி கணேசன், நடிகை பத்மினியுடனும் சுமார் 50 படங்களுக்கு மேல் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அப்படி அவர்கள் இருவரும் இணைந்து நடித்து பெரும் பாராட்டை பெற்ற எதிர்பாராதது திரைப்படத்தில் ஒரு காட்சியால் சிவாஜிக்கு காய்ச்சலே வந்து விட்டது.

சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி இணைந்து நடித்த திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் ‘எதிர்பாராதது’. இந்த திரைப்படத்திற்கு சி.வி. ஸ்ரீதர் கதை எழுத, நாராயணமூர்த்தி கதை எழுதி இருந்தார். சுமார் 100 நாட்களுக்கு மேல் ஓடிய இந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதுடன் தேசிய விருதையும் வென்றிருந்தது.

தமிழில் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் எதிர்பாராதது திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. இந்த படத்தில் வரும் காட்சி ஒன்றில் சிவாஜி கணேசன் கன்னத்தில் பத்மினி அறைவது போன்ற காட்சி வரும். முன்னதாக இந்த காட்சி படமாக்கப்பட்ட சமயத்தில் சிவாஜி கன்னத்தில் அறைய பத்மினி தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.

அப்படி இருந்தவரை மெல்ல மெல்ல தேற்றி எடுத்த சிவாஜி கணேசன், தைரியமாக அந்த காட்சியில் நடிக்கவும் தெம்பு கொடுத்தார். இதன் பின்னர் காட்சி படமாக்கப்பட்ட சமயத்தில், சிவாஜியின் கன்னத்தில் பத்மினி அடித்த அடியால் அவருக்கு காய்ச்சலே வந்து விட்டது. அந்த அளவுக்கு நிஜமாகவே பத்மினி அடிக்க, இதனால் ஏறக்குறைய மூன்று நாட்கள் காய்ச்சலால் அவதிப்பட்டார் சிவாஜி.

தன்னால் சிவாஜிக்கு இப்படி ஒரு நிலை உருவானது அறிந்து வேதனைப்பட்ட நடிகை பத்மினி, அவரை நேரில் போய் சந்தித்துள்ளார். அவருக்கு ஆறுதல் சொல்லியதுடன் மட்டுமில்லாமல், தனது சொந்த செலவிலே கார் ஒன்றை வாங்கி சிவாஜிக்கு பரிசளித்துள்ளார் பத்மினி. இதனைத் தொடர்ந்து அடுத்த படம் ஒன்றில் எம்ஜிஆருடன் நடிக்கும் வாய்ப்பும் பத்மினிக்கு உருவாகி இருந்தது.

அப்போது அவருடன் கலகலப்பாக பேசிய எம்ஜிஆர், என்னை அடிக்குமாறு ஒரு காட்சியை இந்த படத்தில் வைக்கும்படி இயக்குனரிடம் சொல்லுங்கள் என்றும் அதற்காக கார் ஒன்றை தனக்கு பரிசாக அளிக்கும்படியும் பத்மினியிடம் கூறி உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.