முட்டி மோதிக் கொண்ட டி.எம்.எஸ்-இளையராஜா.. குரல் திருப்தி இல்லாததால் பாடிய எஸ்.பி.பி!

தமிழ் சினிமாவின் தனிப் பெரும் ஆளுமைகள் என இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் இசைச் சக்கரவர்த்தி இளையராஜா. மற்றொருவர் பாடல் அரசன் டி.எம்.சௌந்தரராஜன். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை சிவாஜி கணேசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் பாடி பல ஹிட்களைக் கொடுத்தவர் டி.எம்.எஸ். அதேபோல் இளையராஜா அன்னக்கிளி கொடுத்த வெற்றியால் இசையில் கொடிகட்டிப் பறந்தவர். இளையராஜா-எஸ்.பி.பி கூட்டணி பல ஹிட் பாடல்களைக் கொடுத்து ரசிகர்களை தனது இசையால் வசியப் படுத்தி வைத்திருந்த காலம் அது.

அவ்வாறு இருக்கையில், இவ்விருவரும் ஒரு படத்தில் இணைந்தனர். அந்தப் படம் தான் 1979-ல் வெளிவந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ’நான் வாழ வைப்பேன்’ என்ற திரைப்படம். கே.ஆர்.விஜயா, ரஜினிகாந்த், பண்டரிபாய் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கண்ணதாசனும், வாலியும் இப்படத்திற்கு பாடல்கள் எழுதியிருந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற என்னோடு பாடுங்கள் என்ற பாடலை டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார்.

எம்ஜிஆரின் கவலையை புரிந்து கொண்டு அதை பாடல் வரிகளாக மாற்றிய கவிஞர் கண்ணதாசன்!

பாடல் ரெக்கார்டிங் முடிந்து அந்த பாடலை கேட்ட இளையராஜாவுக்கு அதில் திருப்தி இல்லையாம். ஆனாலும் சிவாஜிக்கு என்றே படைக்கப்பட்ட குரலாக இருந்தவர் டி.எம்.எஸ். எந்தப் படத்தில் பாடினாலும் டி.எம்.எஸ். பாடுவதற்கு ஏற்ப அச்சுப் பிசகாமல் வாயசைப்பார் சிவாஜி. இதை அப்போது மனதில் கொள்ளாத இளையராஜா, என்னோடு பாடுங்கள் என்ற பாடலை டி.எம் சௌந்தரராஜனுக்கு பதிலாக அப்போது வளர்ந்து வந்த பாடகரான இருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியனை பாட வைத்துள்ளார். மேலும் இப்படத்தில் ரஜினிக்கு அமைந்த சூப்பர் ஹிட் பாடலான ‘ஆகாயம் மேலே’ என்ற பாடலை யேசுதாஸ் பாடியிருந்தார்.

இதனால் டி.எம்.சௌந்திரராஜனுக்கும் இளையராஜாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இருந்தபோதிலும் இந்த படத்தில் வரும் ‘திருத்தேரில் வருகின்ற நிலவோ’ என்ற பாடலையும் எஸ்.பி.பி பாடியிருந்த நிலையில், ‘எந்தன் பொன்வண்ணமே’ பாடலை டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார். இந்த படத்தில் இரு பாடல்களை பாடிய எஸ்.பி.பி அன்று வளர்ந்து வரும் பாடகராக இருந்ததால் சிவாஜிக்கு புதிய குரல் கொடுத்தால் அவரது ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும் என்பதால் இளையராஜா எஸ்.பி.பியை பாட வைத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.