கபாலி, காலா படம் கொடுத்தவருக்கு கடைசியில பா.ரஞ்சித் இப்படி சிக்கலை உருவாக்கிட்டாரே!..

‘ப்ளூ ஸ்டார்’ படம் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ஆடியோ லான்ச் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துக்கொண்டு பேசிய இயக்குனர் பா. ரஞ்சித், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதில் தனக்கு விமர்சனம் இருப்பதாக கூறியது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், ஷாந்தனு ஆகியோர் நடிப்பில் ‘ப்ளூ ஸ்டார்’ படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பா. ரஞ்சித், படத்தின் இயக்குனர் ஜெய்யும் நானும் கல்லூரியில் ஒன்றாக படித்தோம் , படத்தில் வசனம், கதை எல்லாம் பிடித்ததாகவும், நன்றாக உழைத்துள்ளனர் என்றும் பேசினார். இப்படம் ஜனவரி 25ம் தேதி ரீலிஸாக உள்ளது.

ரஞ்சித் vs ரஜினி:

இயக்குநர் ஜெயக்குமார் இரண்டு படங்களில் உதவி இயக்குனராக இருந்தார். ஆரம்பத்தில் அவர் அனிமேஷன் படத்தை இயக்க போவதாக கூறினார். நண்பன் உதவி இயக்குனராக இருந்தது சங்கடமாக இருந்ததால் தான் ‘நீ படம் எடு. நான் தயாரிக்கிறேன்’ என கூறினேன் என்றார் பா. ரஞ்சித்.

இயக்குனர் பா. ரஞ்சித், ‘ ராமர் கோயில் திறப்புக்கு பின்னால் மத அரசியல் இருக்கிறது. கோயில் கூடாது என்பது நமது பிரச்சனை அல்ல. கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்றும் பேசியுள்ளார்.

ப்ளூ ஸ்டார் மற்றும் லால் சலாம் கதை:

மேலும், கிரிக்கெட்டை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும் ஜாதிச் சண்டையை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லைகா தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடித்த லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிப்ரவரி 9-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டில் நடக்கும் அரசியலை மையமாக கொண்டு உருவாக்கியுள்ளனர். கடைசி வரை மொய்தீன் பாய் மட்டுமே தெரிகிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் கேரக்டர் பெயர்கள் கூட ரசிகர்களுக்கு இன்னும் தெரியவில்லை.

இரண்டு படங்களுமே கிரிக்கெட் மற்றும் அதில் நடக்கும் சாதி, மத அரசியலை மையப்படுத்திய படமாக உருவாகி உள்ள நிலையில், ப்ளூ ஸ்டார் படத்தை பார்த்த ரசிகர்கள் அதே போல உருவாகி உள்ள லால் சலாம் படத்தை பார்ப்பார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது என்றும் இதன் காரணமாக பின்னாடி வரும் லால் சலாம் படத்துக்கு பின்னடைவு தான் எனக் கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.