சாம்சங்கிற்கு போட்டியாக ஒப்போ வெளியிட்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன். கேமிரா வேற லெவல்..!

ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சிறப்பு அம்சங்களை கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களை தயாரித்து வருகின்றன. இதுவரை ஸ்மார்ட் போன் தயாரிப்பில் சாம்சங் முன்னணியில் இருந்த நிலையில் தற்போது சாம்சங் நிறுவனத்தை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஓப்போ நிறுவனத்தின் புதிய மாடல் Oppo Find X6 Pro என்ற ஸ்மார்ட் போன் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பு அம்சங்கள் விலை குறித்து தற்போது பார்ப்போம்.

Oppo Find X6 Pro கடந்த மார்ச் மாதம் சீனாவில் வெளியானது. Snapdragon 8 Gen 2 செயலி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரெசலூசன், 6.7-இன்ச் OLED டிஸ்ப்ளே, 50எம்பி மெயின் சென்சார், 50எம்பி அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 13எம்பி டெலிஃபோட்டோ சென்சார் உள்பட பல சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும் 5000mAh பேட்டரி மற்றும் 100W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய அம்சங்களும் உண்டு.

Oppo Find X6 Proஸ்மார்ட்போனில் Snapdragon 8 Gen 2 செயலி இருப்பதால் கடினமான பணிகளைக் கூட எளிதாக செய்ய முடியும்,. மேலும் இதில் அதிக ரேம் மற்றும் ஸ்டோரேஜ் இருப்பதால் செயல்திறன் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.

Oppo Find X6 Pro கேமிரா ரொம்பவே ஸ்பெஷல் என கூறப்படுகிறது. டிரிபிள் லென்ஸ் அமைப்பு இருப்பதால் இருளில் கூடபிரமிக்க வைக்கும் புகைப்படங்களை எடுக்கிறது. பிரகாசமான ஒளி, இருண்ட சூழல்களில் செயல்படும் வகையில் அல்ட்ராவைடு சென்சார் இருப்பதால் வேற லெவலில் போட்டோக்கள் இருக்கும்.

Oppo Find X6 Pro இல் பேட்டரி மிகவும் சிறப்பானது. 5000mAh பேட்டரி என்பதால் அதிகமாக பயன்படுத்தினாலும் சார்ஜ் எளிதில் தீராது. ஒருமுறை சார்ஜ் செய்தால், ஒரு நாள் முழுவதும் எளிதாக நீடிக்கும். மேலும் 100W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய அம்சங்கள் உள்ளன.

Oppo Find X6 Pro ஸ்மார்ட்போனின் நிறைகள்:

* சக்திவாய்ந்த Snapdragon 8 Gen 2 செயலி
* சிறந்த கேமரா அமைப்பு
* நீண்ட கால பேட்டரி
* வேகமாக வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்
* நேர்த்தியான மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு

குறைகள்:

* எல்லா சந்தைகளிலும் கிடைக்காது
* விலை உயர்ந்தது
* ஹெட்ஃபோன் ஜாக் இல்லை

Published by
Bala S

Recent Posts