40 நாள்களுக்கு ஒரு படம்… 30 வருடங்களாக அயராமல் நடித்து அசத்திய நடிகர் திலகம்!

தமிழ்த்திரை உலகில் நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் என்றாலே நல்ல வியாபாரமும், லாபமும் பார்த்தன. உத்தமபுத்திரன், தெய்வமகன், சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள் படங்களைச் சொல்லலாம். வெள்ளி விழா, வருடக்கணக்கில் ஓடிய படங்கள் சிவாஜிக்கு தமிழில் நிறைய உண்டு.

Uthamaputhiran
Uthamaputhiran

100 நாள்கள் படங்கள் நிறைய உள்ளன. தில்லானா மோகனாம்பாள், கர்ணன் படங்கள் அப்படி ஓடின. இவற்றைத் தான் ரசிகர்கள் ரசிக்கிறார்கள். உத்தமபுத்திரன் படம் 1958ல் வெளிவந்தது. இந்த ஆண்டில் மட்டும் 9 படங்கள் வெளிவந்தன. 40 நாள்களுக்கு ஒரு படமா? தெலுங்கில் பொம்மன வெள்ளி, உத்தமபுத்திரன், பதிபக்தி, சம்பூர்ண ராமாயணம், அன்னையின் ஆணை, சாரங்கதாரா, சபாஷ்மீனா, காத்தவராயன். இவற்றில் சாரங்கதாராவைத் தவிர மற்ற படங்களைப் பாருங்கள். இது இந்த வருடம் மட்டுமல்ல. 30 வருடங்களாக இப்படித் தான்.

இவற்றில் அன்னையின் ஆணை, பதிபக்தி, சபாஷ்மீனா, உத்தமபுத்திரன் ஆகியவை 100 நாள் படங்கள். சம்பூர்ண ராமாயணம் வெள்ளி விழா. 1968ல் திருமால் பெருமை, ஹரிச்சந்திரா, கலாட்டா கல்யாணம், என் தம்பி, உயர்ந்த மனிதன், எங்க ஊர் தம்பி, லட்சுமி கல்யாணம், தில்லானா மோகனாம்பாள் ஆகிய தரமான படங்களும் வந்தன. அவை 100 நாள்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்றன.

இன்றைக்கும் தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு இருக்கும் ரசிகர்களின் கூட்டம் வேறு படத்திற்கு இருக்காது. அந்தப் படம் ஒரு வருடம் ஓட வேண்டியது. 45 நாள்களுக்கு ஒரு படம் என 30 வருடங்களாகத் தொடர்ந்து படம் நடித்தவர் சிவாஜி.

சிவாஜியின் படங்களுக்கு மக்கள் மிகுந்த வரவேற்பு கொடுப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? அவரது அபார நடிப்பு, சமுதாய சிந்தனை மற்றும் குடும்பப்பாங்கான கதை அம்சம் கொண்ட கருத்துள்ள படங்களாக இருந்தன. நடிகர் திலகத்தின் படங்கள் வரலாற்றைச் சொல்பவையாக உள்ளன.

Thillana mohanampal
Thillana mohanampal

படங்கள் வெளியாகும்போது மட்டுமல்லாமல் வெளியிடும்போதெல்லாம் ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தபடி வரும். நடிகர் திலகத்தின் படங்கள் பெரும்பாலும் கலை அம்சம் கொண்டதாகவே இருக்கும். சிவாஜியின் படங்களைப் பொறுத்தவரை ரிலீஸான தேதியிலேயே அவரது அடுத்தடுத்த படங்களும் வெளிவர ஆர்வம் காட்டுவார்களாம். காரணம் முந்தைய படங்கள் அதிக வசூலை செய்ததால் தான் என்றும் சொல்வர்.

30 ஆண்டுகளாக தொடர்ந்து அயராமல் சினிமாவில் நடித்து நல்ல பல கலை அம்சம் கொண்ட படங்களையும், சமுதாயத்திற்கும், நாட்டுக்கும், குடும்பத்திற்கும் தேவையான படங்களைத் தந்தவர் நடிகர் திலகம் சிவாஜி. அப்படி என்றால் வியாபாரம் எப்படி நடந்திருக்கும்? அந்தப் படத்தைச் சுற்றிலும் உள்ள வணிகச்சூழல் எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews