காலம் கடந்து பேசும் தத்துவப் பாடல் படங்களின் இயக்குநர்.. இதெல்லாம் இவர் எடுத்ததா?

இன்று இந்திய சினிமாவில் இயக்குநர்  ஷங்கரைத் தெரியாதவர்கள் யாருமே இல்லை. அதேபோல் அந்தக் கால தமிழ் சினிமாவிலும் கலக்கிய ஒரு முக்கிய இயக்குநர் தான் இயக்குநர் சங்கர். தமிழ் சினிமாவின் டாப் 10 இயக்குநர்களில் இவரையும் குறிப்பிடலாம். ஏனெனில் அவர் எடுத்த அத்தனை படங்களும் முத்தானவை. இன்றும் கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள் நம்மை ஆட்கொண்டிருக்கிறது என்றால் அது இயக்குநர் சங்கரின் கைவண்ணத்தில் உருவான படங்களில் தான் அந்த மேஜிக் நிகழ்ந்தது.

சவப்பெட்டியில் இருந்த நடிகர் அசோகனுக்கு ஜெய்சங்கர் செய்த அந்த செயல்.. அந்த அளவிற்கு இப்படி ஓர் நட்பா?

எம்ஜிஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன் என மூவேந்தர்களுக்கும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். குறிப்பாக ஆலயமணி, குடியிருந்த கோவில், அடிமைப்பெண் என  கிளாசிக் படங்களைத்  காவியங்களை தமிழ்சினிமாவுககுத் தந்தவர்.

படத் தொகுப்பாளராக இருந்து பின்னர் இயக்குநராக மாறிய சங்கர், 1959ல் மருது சகோதரர்களின் வீரத்தை திரையில் காட்டியவர். ஆனால் அதே ஆண்டில் சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் வெளிவந்து பெரிய அளவில் பேசப்பட்டதால் சங்கரின் ‘சிவகங்கை சீமை‘ அந்த அளவுக்கு பேசப்படாமல் போய் விட்டது.

1962ல் சங்கர் இயக்கிய ஆலயமணி படத்தை , பாராட்டாத பத்திரிகைகளே கிடையாது..  குறிப்பாக சட்டி சுட்டதடா கை விட்டதடா, கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா, பொன்னை விரும்பும் பூமியிலே, தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே என எத்தனையோ எவர்கிரீன் பாடல்களைக் கொண்டிருந்தது ஆலயமணி திரைப்படம். மேலும் எம்ஜிஆரை வைத்து பணத்தோட்டம் படத்தை இயக்கி அதிலும் பாடல்களில் ஹிட் கொடுத்தார்.

இப்படத்தில் ‘பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா‘ என்ற பாடலும், ” என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” என்ற பாடலும் இன்றும் இணையத்தை ஆக்கிரமிக்கும் பாடல்கள்.

மேலும் அவர் இயக்கிய பாத பாதகாணிக்கை ‘’வீடுவரை மனைவி, வீதிவரை உறவு காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ?’’ என்ற தத்துவ பாடல் இன்று இடம்பெறாத துக்க வீடுகளே கிடையாது என்னும் அளவிற்கு தத்துப் பாடல்களின் இயக்குநராக வலம் வந்தார் சங்கர்.  ஆண்டவன் கட்டளை, கைராசி, ஆடிப்பெருக்கு போன்ற பல காவியப் படங்களையும் தமிழ் சினிமாவிற்கு அளித்தவர்.

தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் ‘தமிழுக்கும் அமிழ்தென்று பேர், அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்‘ என்று கேஆர் விஜயா பாடுவாரே, அந்த பாடல் இடம்பெற்ற பஞ்சவர்ணகிளி என்ற படமும் சங்கர் இயக்கிய வெற்றிப்படம்தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...