எம்.ஆர்.ராதா நடிப்பில் திருப்தி அடையாத இயக்குநர்.. பதிலுக்கு எம்.ஆர்.ராதா செய்த காரியம்

தமிழ் சினிமா உலகில் நடிக வேள் என்று போற்றப்படும் எம்.ஆர்.ராதா அவர்கள் நாடகத்துறையிலிருந்து சினிமாவிற்கு வந்தவர். இவரின் அடிக்கடி குரலை ஏற்ற இறக்கமாக பேசி நடிக்கும் வசனங்களும், மேனரிஸமும் மிகவும் புகழ் வாய்ந்தவை. அதனால் தான் இன்றளம் பல மிமிக்ரி கலைஞர்கள் எம்.ஆர்.ராதாவை கண்முன் கொண்டு வந்து நிறுத்துவார்கள்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனையே நடிப்பில் ஓவர் டேக் செய்யும் எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்கு ரத்தக் கண்ணீர் படம் ஒரு மிகப்பெரிய சான்று. ரத்தக்கண்ணீர் நாடகமாகவே கிட்டத்தட்ட 3000 முறைக்குமேல் மேடைஏறி இருக்கிறதாம். மேலும் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது. இப்படி நடிப்புக்குப் பெயர் போன எம்.ஆர்.ராதா நடித்த படம் ஒன்றில் அவரது நடிப்பு திருப்திஇல்லாததைக் கேள்விப்பட்ட அவர்பதிலுக்கு மீண்டும் அதே காட்சியை தனது சொந்த செலவில் எடுத்து இயக்குநரை திருப்திப்படுத்தியுள்ளார்.

1960-ம் ஆண்டு வெளியான படம் தான் கைராசி. இப்படத்தில் ஜெமினிகணேசன், சரோஜாதேவி உள்ளிட்டோருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் எம்.ஆர்.ராதாவும் நடித்துள்ளார். வழக்கமாக ஒரு டேக்கில் அசத்திவிடும் எம்.ஆர்.ராதா இந்தப் பட ஷுட்டிங்கில் அவரது நடிப்பு சற்று சோடை போனது. இதனால் அப்படத்தின் இயக்குநர்  சங்கருக்கு திருப்தி அடையவில்லை.

நடிகர் திலகம் பட்டம் எப்போது யார் கொடுத்தது தெரியுமா? டைட்டில் கார்டில் போட்ட முதல் படம் இதுவா?

இதனால் மீண்டும் அக்காட்சி படமாக்கப்பட்டபோது மீண்டும் அதே முறை திருப்தி அடையாமல் இருக்கவே இருந்தும் எம்.ஆர்.ராதாவோ பெரிய நடிகர் என்பதால் ஓ.கே. சொல்லிவிட்டு அரை மனதுடன் அன்று ஷுட்டிங் முடித்திருக்கிறார். அப்போது அவரின் மேக்கப் மேன் கஜபதியிடம் அண்ணன் இன்னும் சற்று சிறப்பாக நடித்திருக்கலாம். என்ன செய்வது அவரும் மிக பிஸியாக நடித்து வருகிறார் என்று புலம்பியிருந்திருக்கிறார்.

இதனை மேக்கப் மேன் எம்.ஆர்.ராதாவிடம் சொல்ல உடனே இயக்குநர் சங்கர் வீட்டிற்குச் சென்று என்னுடைய காட்சி திருப்தி இல்லையாமே என்று கூறி சரி அதை விடு மீண்டும் நாளை மாலை 6 மணிக்கு மீண்டும் ஷுட்டிங் வையுங்க என்று கூற அதனை தயாரிப்பாளரும், இயக்குநரும் நிராகரித்துள்ளனர். இருந்தே போதிலும் எம்.ஆர்.ராதா விடாப்பிடியாக மீண்டும் அந்தக் காட்சியை படமாக்கி கடந்த முறையை விட மும்மடங்கு அதிக சிறப்பாக நடித்துக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்தக் காட்சிக்குரிய செலவினை தாமே ஏற்றுக் கொண்டுள்ளார்.

தயாரிப்பாளர் வேண்டாம் என்று கூற விடாப்பிடியாக வைத்து விட்டு வந்துள்ளார் எம்.ஆர்.ராதா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...