மேற்கத்திய தீவுகளுடன் ஒருநாள் கிரிக்கெட் தொடர்-இந்திய அணி அறிவிப்பு!! கேப்டனாக சிக்சர் அடிப்பாரா தவான்?

தற்போதுள்ள இந்திய அணியின் கேப்டனாக உள்ளார் ரோகித் சர்மா. இதற்கு முன்னதாக விராட் கோலி ஒரு நாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான கேப்டனாக பதவி வகித்து கொண்டு வந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்திய அணி இங்கிலாந்து அணியோடு கடந்தாண்டு நடைபெறாமல் இருந்த கடைசி டெஸ்ட் போட்டி ஒன்றனை விளையாடியது. இதில் கேப்டனாக பும்ரா செயல்பட்டார்.

இந்த நிலையில் தற்போது மேற்கிந்திய தீவுகளோடு ஒருநாள் கிரிக்கெட் தொடர் உள்ளதாக தெரிகிறது. இதில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி ரோகித் சர்மா, விராட் கோலி, பண்ட், பும்ரா உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில்  தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தவான் தலைமையிலான அணியில் ரவீந்திர ஜடேஜா, ருத்ராஜ், கில், சூரியகுமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இசான், சாம்சன், அக்ஸர் , சர்துல் தாகூர், ஹூடா, ஸ்ரேயர்ஸ், சஹால், ஆவேஸ் கான் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.