விடிஞ்சா கல்யாணம் புடி வெத்தல பாக்கை!.. நயன்தாராவின் அன்னபூரணி ட்ரெய்லர் எப்போ ரிலீஸ் தெரியுமா?..

இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி திரைப்படம் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், தற்போதுதான் அந்தப் படத்தின் டிரைலர் என்று வெளியாகும் என்கிற அப்டேட்டை நயன்தாரா கொடுத்துள்ளார்.

ஷங்கரின் உதவி இயக்குனரான அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் நயன்தாராவுக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. சமீபத்தில் பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கிய அட்லி அந்த படத்திற்கும் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என இங்கிருந்து அவரை அழைத்து சென்று பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்தார்.

அன்னபூரணி டிரெய்லர் நாளை ரிலீஸ்:

ஜவான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நடிகர் ஷாருக்கானுக்கு இந்த ஆண்டு இரண்டாவது ஆயிரம் கோடி ரூபாய் வசூல் படமாக மாறியது. தமிழ் சினிமா பக்கம் இந்த ஆண்டு பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில், நடிகர் ஜெய் மற்றும் சத்யராஜ் உடன் அன்னபூரணி படத்தில் நயன்தாரா.

மிஸ் செட்டி மிஸ்டர் பொலிசெட்டி படத்தில் அனுஷ்கா உணவு சமைக்கும் செஃப்பாக நடித்த நிலையில், அன்னபூரணி படத்தில் நயன்தாராவும் செஃப்பாக நடித்துள்ளார்.

ஆச்சாரமான அய்யங்கார் குடும்பத்து பெண்ணாக வரும் நயன்தாரா, அசைவ உணவுகளை சமைத்து பெரிய உணவு சாம்ராஜ்யத்தை எப்படி செய்யப் போகிறார் என்கிற கதையுடன் இந்த படம் உருவாகியுள்ளது.

வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி அன்னபூரணி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், நாளை நவம்பர் 27-ஆம் தேதி அந்தப் படத்தின் டிரைலர் வெளியாகும் என தற்போது புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு நடிகை நயன்தாரா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். படம் வெளியாக நான்கு நாட்களே உள்ள நிலையில், டிரைலரை இப்போதான் ரிலீஸ் பண்ண போறீங்களா என்ன ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மாயா, அறம், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களைத் தவிர்த்து பத்துக்கும் மேற்பட்ட உமன் சென்ட்ரிக் படங்களின் நயன்தாரா நடித்துள்ளார். ஆனால் அதில் பல படங்கள் ஓடவே இல்லை. அன்னபூரணி படத்துக்கு புரமோஷனே இல்லாத நிலையில், இந்த படத்தின் மீது படக்குழுவினருக்கு நம்பிக்கை இல்லையா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.