இயக்குனர் அவதாரம் எடுக்கிறாரா நயன்தாரா?.. புது தொடக்கம்னு போட்டு மாஸ் கிளப்புறாரே!..

தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய சினிமா உலகின் முன்னணி நடிகையாக கலக்கி வரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தொட்டதெல்லாம் பொன்னாகி வரும் நிலையில், புதிய தொடக்கம் ஒன்றையும் விரைவில் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நயன்தாரா மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி, தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, பாலிவுட்டில் ஷாருக்கான் என இந்திய திரையுலகின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார்.

நயன்தாரா 3.0:

அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்துக்கு நயன்தாராவுக்கு செகண்ட் இன்னிங்ஸை சினிமாவில் உருவாக்கி தந்த நிலையில், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் இந்த ஆண்டு 3வது இன்னிங்ஸை நயன்தாரா தொடங்கி உள்ளார்.

ஜவான் திரைப்படம் 1100 கோடி வசூல் ஈட்டிய நிலையில், அடுத்ததாக தமிழில் அன்னபூரணி படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் நயன்தாரா மண்ணாங்கட்டி படத்திலும் நடித்து வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி நடிக்க உள்ள தக் லைஃப் திரைப்படத்திலும் நயன்தாரா நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனராகிறாரா நயன்தாரா:

இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு உயிர் மற்றும் உலகத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நயன்தாரா சினிமா மற்றும் பிசினஸ் என தொழிலிலும் தனது முழு முயற்சியை வெளிப்படுத்தி வியக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில் பிரம்மாண்ட கேமராவுக்கு பின்னர் நின்று கொண்டு, நயன்தாரா போஸ் கொடுத்தா போட்டோவை வெளியிட்டு “நியூ பிகினிங்ஸ்” என்று பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ள நிலையில், சூரிய விரைவில் இயக்குனராகப் போகிறாரா நயன்தாரா என்கிற கேள்வியை சினிமா உலகம் தற்போது எழுப்பியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனைப் போல இயக்கத்திலும் ஒரு கை பார்த்துவிடலாம் என நினைத்து விட்டாரா என்கிற கேள்விதான் தற்போது எழுந்துள்ளது.

அந்த காலத்தில் நடிகைகள் பானுமதி, சாவித்ரி அதற்குப் பிறகு நடிகைகள் லட்சுமி, ரேவதி, ரோகினி உள்ளிட்ட பலர் இயக்கத்திலும் அசத்திய நிலையில், அந்த வரிசையில் நடிகை நயன்தாராவும் கூடிய விரைவில் தனது படத்தை இயக்குவாரா என்கிற ஆர்வம் எழுந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.