அடுத்த படம் குறித்து ரகசியமாக டீல் பேசி முடித்த நயன்தாரா- சந்தானம்?

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நகைச்சுவை நடிகர்களுக்கு என்று மக்கள் மனதில் தனி இடம் உண்டு. அந்த வகையில் முதலில் காமெடியனாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவா மாறியவர் தான் நடிகர் சந்தானம். இவரது கலாய்க்கும் திறமையால் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் அவரது கேரியரில் சிறந்த படமாக அமைந்து அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிரேம் ஆனந்த் இயக்கிய பேய் நகைச்சுவை படத்தில் மாறன், மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை, பெபின், விஜயன், தீபா, ரெடின் கிங்ஸ்லி மற்றும் சுரபி போன்ற பல நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர்.

இதற்கிடையில், டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் தனியார் தொலைக்காட்சியுடன் நடந்த நேர்காணலின் போது, ​​வல்லவன் (2006) முதல் பல படங்களில் நயன்தாராவுடன் இணைத்து நடந்துள்ளதால் நயன்தாராவுடனான உறவு குறித்து சந்தானத்திடம் கேள்வி கேட்கப்பட்டது.

தாங்கள் அண்ணன், தங்கை போன்றவர்கள் என்றும், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்கள் மகன்களான உலகம் மற்றும் உயிரை தாய் மாமாவான எனது மடியில் உட்கார வைத்து காது குத்தும் விழாவை நடத்த வேண்டும் என்றும் நகைச்சுவையாக கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடித்த ஏகே 62 படத்தில் நகைச்சுவை மற்றும் சீரியஸ் கலந்த பவர்ஃபுல் கேரக்டரில் தான் நடிக்க இருந்ததாவும் சந்தானம் கூறினார். ஆனால் அந்த படம் துரதிர்ஷ்டவசமாக கைவிடப்பட்டது.

அதை தொடர்ந்து நயன்தாரா, ஆர்யா,சந்தானம் இணைந்து நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் பட்சத்தில் இந்த கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என்றும் சந்தானத்துடன் இணைந்து படத்தில் நடிக்க ஆசை இருப்பதாகவும் நயன்தாரா தெரிவித்ததாக கூறினார்.

மேலும் அவர் நயன்தாரா விக்கியை சந்திக்க சென்றபோது தன்னை நன்கு கவனித்து கொண்டதாகவும், அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டதாகவும் கூறினார். பின்னர் நயன்தாராவின் குழந்தைகளுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு வந்ததாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...