அன்னபூரணி படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா?.. தலையே சுத்துதே!..

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவரும் நடிகை நயன்தாரா மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக இப்போதும் வலம் வருகிறார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையிலும், தொடர்ந்து ஷாருக்கான், ஜெயம் ரவி, ஜெய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நயன்தாராவின் 75வது படம்:

அதற்குள் தனது 75-வது படத்தையும் நயன்தாரா பூர்த்தி செய்துவிட்டார். வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள அன்னபூரணி திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா சமையல் கலை நிபுணராக நடித்துள்ளார்.

இந்த ஆண்டு நயன்தாரா தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்து முதல் படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து 1100 கோடி வசூல் வேட்டையும் பார்த்துவிட்டார்.

அன்னபூரணியில் நயன்தாரா சம்பளம்:

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு 11 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்தனை பெரிய பட்ஜெட் படத்தில் 11 கோடி சம்பளம் வாங்கிய நயன்தாரா, தற்போது வுமன் சென்ட்ரிக் கதையை மையமாக வைத்து நடித்துள்ள அன்னபூரணி படத்திற்காக சுமார் 10 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அறம் திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா நடித்து வெளியான பல நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்கள் பெரிதாக ஓடவில்லை. ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் மட்டுமே நடுவில் தப்பித்தது.

இந்நிலையில், டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாக உள்ள நயன்தாராவின் 75-வது திரைப்படமான அன்னபூரணி அவருக்கு வெற்றியை கொடுக்கிறதா இல்லையா என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அடுத்ததாக நயன்தாரா ஜெயம் ரவியுடன் தனி ஒருவன் 2 படம், மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களிலும் நடிக்கப் போகிறார். மேலும், பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழில் முன்னணி நடிகர்களுடன் மீண்டும் நயன்தாரா எப்போது ஜோடி சேருவார் என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.