அன்னபூரணி விவகாரம்!.. பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட நயன்தாரா.. ராம பக்தர்கள் மன்னிப்பார்களா?..

அன்னபூரணி படத்தில் ராமர் அசைவப் பிரியர் என்பது போல சித்தரிக்கப்பட்டது மற்றும் லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டதாக கூறி நயன்தாரா படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது மட்டுமின்றி மும்பை காவல் துறையில் எஃப்ஐஆர் கூட பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி நினைக்க நயன்தாரா பகிரங்கமாக மன்னிப்புக் கோரி உள்ளார்.

ஆரம்பத்திலேயே “ஜெய் ஸ்ரீராம்” என போல்டாக போட்ட நயன்தாரா தான் எந்த உள்நோக்கத்துடனும் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் யாருடைய மனதாவது புண்பட்டு இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டு இருக்கிறார்.

ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட அன்னபூரணி:

நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் தியேட்டரில் வெளியான போது அந்த படத்தில் எந்த சுவையும் இல்லை சப்புன்னு இருக்கு என விமர்சனங்கள் வெளியான நிலையில், படத்தை ரசிகர்கள் யாருமே பார்க்கவில்லை. ஆனால், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியான நிலையில், படம் பேசுபொருளாக இருப்பது மாறியது. மேலும், அழுத்தம் காரணமாக அந்த படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது.

இதை எல்லாம் அறிந்த நயன்தாரா அது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடன் அறிக்கை வெளியிடுகிறேன் என மன்னிப்புக் கடிதத்தை தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிட்டுள்ளார்.

அதில், அன்னபூரணி படத்தை வெறும் வணிக நோக்கத்திற்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே நினைத்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே அன்னபூரணி படத்தை உருவாக்கினோம் என்றார்.

மேலும், அன்னபூரணி வாயிலாக ஒரு பாசிட்டிவான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை காயப்படுத்தி இருப்பதை அறிந்து கொண்டோம்.

மன்னிப்புக்கேட்ட நயன்தாரா:

சென்சார் செய்யப்பட்டு திரையரங்கில் வெளியான அன்னபூரணி ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் படக்குழுவுக்கும் துளியும் இல்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ஏகப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் தான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன் என்று விளக்கமளித்துள்ளார்.

அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என நயன்தாரா அந்த அறிக்கையில் மன்னிப்பும் கோரியுள்ளார். அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் காயப்படுத்துவது அல்ல.

எனது 20 ஆண்டு கால திரைப் பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது பாசிட்டிவிட்டியை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அன்புடன் நயன்தாரா! என அந்த அறிக்கையில் அனைத்து சர்ச்சைகளுக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...