நற்பவி என்று சொல்லுங்கள்- நல்லதை அடையுங்கள்

e3930deb12716f69e2d7678b5ed44b7a

நற்பவி என்றால் மிக உயர்ந்த மந்திரம் ஆகும். இந்த மந்திரத்தை அருளியது காகபுஜண்ட மகரிஷி. பண்டைய நூல்களில் இந்த மந்திரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது என்னவென்றால் இது ஒரு மோகன மந்திரம் ஆகும் நற்பவி நற்பவி நற்பவி என்று சொல்லிக்கொண்டே இருக்க உங்கள் கஷ்டங்கள் மட்டுமல்லாது உலக மக்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. நற்பவி என்றால் நல்லது உண்டாகட்டும் நல்லது நடக்கட்டும் என அர்த்தம் ஆகும்.

உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த மந்திரத்தை சொன்னால் உங்கள் கஷ்டங்கள் அடியோடு விலகுவதோடு பணக்கஷ்டம், மனக்கஷ்டம் அனைத்தும் விலகி நிம்மதி பிறக்கும் என்பதாக சொல்லப்பட்டுள்ளது.

கஷ்டப்படும் நேரங்களில் இந்த நற்பவி மந்திரம் மிகச்சிறந்த அஸ்திரம் என சொல்லப்படுகிறது. நற்பவி ஜெபித்தும் அதை பலமுறை எழுதியும் கஷ்டங்களில் இருந்து விடுபட்டோர் ஏராளம்.

இந்த மோசமான காலகட்டங்களில் நற்பவி மந்திரம் ஜெபித்து நல்ல அதிர்வலைகளை உண்டாக்குவ்வோம்.வாழ்வில் வெற்றி பெறுவோம்.

இது நிர்விகல்பசமாதியில் இருந்து  கிடைத்த ஒரு மோகன மந்திரம் இதை சப்தத்தோடு உச்சரிக்க  சொந்த கஷ்டங்கள் மட்டும் இன்றி உலக மக்களின் கஷ்டங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.