நரசிம்மர் வழிபாட்டுக்கு உகந்தவைகள் எவை?!


நரசிம்மருக்கு செவ்வரளி மாதிரியான சிவப்பு வண்ண மலர்கள்,தயிர் சாதம், நீர்மோர் சர்க்கரைபொங்கல், பானகம் மற்றும் நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுக்கலாம். மேலும் நரசிம்மர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், விஷ்ணுவுக்கு ஏற்ற மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றையும் நரசிம்மருக்கு படைத்து வழிபாடு செய்யலாம். 

பிரதோச வேளையான மாலை 4.30 முதல் 6.00 வரையிலான நேரமே நரசிம்மரை வழிபட உகந்த நேரமாகும். அந்த நேரத்தில்தான் நரசிம்மர் அவதரித்தார்.

இறைவனுக்கு உயிர்களை காக்க மட்டுமே தெரியும். அசுரக்குலத்தில் பிறந்து, பரம எதிரியின் மகனையே கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து காப்பாற்றும் கடவுள் நம்மை காப்பாற்ற மாட்டாரா?! அப்படி அவர் நம்மை காக்க என்ன செய்யனும்?! தவமிருக்கனுமா?! இல்ல விரதமிருக்கனுமா?! பூஜை?! அர்ச்சனை?!ம்ஹூம் எதுமே வேணாம். அபயம்ன்னு அவன் தாளில் முழுமையாய் சரணாகதி அடைந்தால் போதும். நம்மை காப்பான் இறைவன்.

Published by
Staff

Recent Posts