என் வாழ்வில் மிகப் பெரிய சோகம்.. தற்கொலை முடிவுக்கு வந்தேன்.. நளினி பகிர்ந்த தகவல்..!!

Nalini Ramarajan: 1980 கால கட்டங்களில் திரையுலகில் வலம் வந்தவர் நளினி. 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ராணுவ வீரன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமான நளினி அதன் பிறகு பல படங்களில் நடித்துள்ளார்.

80 காலகட்டங்களில் கதாநாயகியாக நடித்த இவர் அதன் பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தொடங்கினார். திரைப்படங்களில் மட்டுமல்லாது பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நளினி அவர்கள் நடித்துள்ளார்.

படத்திற்காக நிறத்தை மாற்றிய பழம்பெரும் நடிகை..ளகழுவி ஊற்றிய பிரபலங்கள்.. வாயடைக்க வைத்த வெற்றி

இவர் 1987 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் முன்னிலையில் ராமராஜன் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1988ல் ஒரு ஆண் ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்தது. இந்த நிலையில் சில காரணங்களால் ராமராஜன் நளினி தம்பதி 2000 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

ஆனாலும் நளினி பல பேட்டிகளில் ராமராஜனை புகழ்ந்தும் அவர் மீது இன்னும் காதல் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் நளினி அளித்த பேட்டி ஒன்றில் தனது வாழ்வில் மிகவும் சோகமான சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

நடிகையர் திலகம்.. என்னிடம் ஆலோசனை கேட்கல.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய பழம்பெரும் நடிகை..!!

அவர் கூறியதாவது “என் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய சோகம், நான் ரொம்ப சந்தோசப்பட்டு பண்ண ஒரு கல்யாணம் நான் வாழ்ந்த ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு எவ்வளவு கெட்டது நடந்தாலும் நல்லதை மட்டுமே மனதில் எடுத்துக் கொண்டு 14 வருடம் வாழ்ந்தேன்.

14 வருடம் கழித்து மார்ச் 8 மகளிர் தினத்தன்று எனக்கு விவாகரத்து கிடைத்தது. அந்த நாள் என் வாழ்வில் பெரிய சோகம். இது வேற எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று நினைத்தேன். எந்த ஒரு கஷ்டத்திலும் அவரோடு தான் வாழ வேண்டும் என்று நினைத்தேன்.

இயக்குனர் பீம்சிங் மனைவி யார் தெரியுமா..? 2500 படங்கள் நடித்த நடிகை..!!

வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். அவர் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து என்ன பிரயோஜனம் என்று தற்கொலை முடிவுக்கு வந்தேன். ஆனா இன்னைக்கு அவர் முன்னாடி நான் தலை நிமிர்ந்து நடக்கிறேன்னா அதுவும் இந்த மதுரைக்கார பொன்னால முடியும்னு புரிந்து கொண்டேன்” என பகிர்ந்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews