2019 இல் சாதனை செய்த ரீமேக் படமான நேர்கொண்ட பார்வை!!

அமிதாப் பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியாகி பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் பிங்க். இந்தத் திரைப்படத்தினை நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் இயக்குனர் வினோத் இயக்கினார்.

ரீ மேக் படமான பில்லா படம் பெரும் தோல்வியினை சந்தித்ததை அடுத்து, அஜித் எந்த ரீமேக் படத்திலும் நடிக்காமல் இருந்தநிலையில் இந்தப் படத்தின் கதை பெண்கள் மீதான வன்முறையினைப் பற்றிப் பேச இதில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

ஒரு 3 பெண்கள் ஒரு ஹோட்டலில் பழைய நண்பர் ஒருவரின் நண்பர்கள் குழுவை சந்திக்கின்றனர், அதில் ஒருவன் அந்தப் பெண்ணில் இருவரிடம் தவறாக நடக்க அவள் பாட்டிலால் அவனைத் தாக்கி விட்டு அவர்கள் மூவரும் வெளியேறுகின்றனர்.

1be2de63e30741fc3bb908e23556aa29-1

அந்த ஆண்களுக்கு எதிராக போலீசாரும் துணை நிற்காத சூழ்நிலையில், ஓய்வில் இருக்கும் மனநோயாளியான அஜித் அவர்களுக்கு நீதி பெற்றுத் தருகிறார்.

படத்தின் கதை, வசனங்கள் காப்பி என்றாலும் அதனை நமக்கென்றே மாதிரி சொன்னவிதம் சூப்பர். முதல் பாதி விறுவிறுப்பு, இரண்டாம் பாதி முழுதும் வசனங்கள்.

2 ஆம் பாதி போர் அடித்தாலும் நோ மீன்ஸ் நோ என்று அழுத்தமாக சொல்லி பெண்கள் நிலையினை சொல்லிக் காட்டிய விதம் அருமையோ அருமை.

தவறு நடக்கும்போது பெண்களை மட்டுமே குறை சொல்லும்பட்சத்தில், அந்தப் பெண்களுக்காக நீதி பெற்றுத் தந்தமையே தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான கதைதான்.

ரூ.50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ரூ.126 கோடி வரை வசூல் செய்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...