இப்படி பன்றீங்களே இசைஞானி.. ரஜினியின் கூலிக்கு ‘செக்’ வைத்த இளையராஜா..

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் கடந்த ஏப்.22-ம் தேதி ரஜினியின் 171-வது படமான ‘கூலி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் யூ டியூப்பில் டீசர் வெளியானது. தற்போது வரை இந்த டீசர் மார் 10 மில்லியனுக்கும் அதிகமாக பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது.

தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் இந்தப் படத்தின் டீசரில் வரும் வசனங்களை ஏற்கனவே ரங்கா படத்தில் ரஜினி பேசியிருப்பார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இதற்கு முன் அனிருத் தர்பார் படத்தில் அண்ணாமலை படத்தின் தேவா இசையமைத்த தீம் மீயூசிக்கை பயன்படுத்தி இருப்பார்.

மேலும் மாஸ்டர் படத்தில் விஜய் கபடி விளையாடும் காட்சியில் கில்லி படத்தின் தீம் மியூசிக்கை பயன்படுத்தியிருப்பார். தற்போது ‘கூலி’ படத்தின் டீசரில் இளையராஜாவின் இசையில் அமைந்த ஒரு பாடலை பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்தப் பாடலானது இளையராஜா இசையில் தங்கமகன் படத்தில் வந்த வா.. வா.. பக்கம் வா.. என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது. இதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படமே.

சூப்பர் ஸ்டாரா இருந்துட்டு போ!.. எனக்கு கப்பம் கட்டு முதல்ல.. ‘கூலி’ படத்துக்கு செக் வைத்த இளையராஜா!

டீசரைப் பார்த்தவர்கள் இது அதுல்ல என்ற தொணியில் அனிருத்தை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர். இவரும் அட்லி போன்று மாறிவிட்டாரோ என்று எண்ணி மீம்ஸ்களை அள்ளித்தெறிக்க தற்போது இந்த டீசருக்கு ஒரு சிக்கல் விழுந்துள்ளது. ஏற்கனவே அனுமதியின்றி தனது பாடல்களைப் பயன்படுத்துவோர் தனக்கு ராயல்டி தர வேண்டும் என்று இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்திருக்க, ‘கூலி’ படத்திலும் அவர் அனுமதியின்றி இந்தப் பாடல் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சன்பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா சார்பில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், கூலி படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள வா.. வா.. பக்கம் வா.. பாடலின் இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும். அல்லது டீசரிலில் இருந்து அந்தப் பாடலின் இசையை நீக்க வேண்டும் என சன்பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாறு செய்யாத பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளதையும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார் இளையராஜா.

Published by
John

Recent Posts