எம் எஸ் விஸ்வநாதன் வாழ்க்கையில் விளையாடிய விதி!.. அது மட்டும் நடந்திருந்தால்..?

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்கள் வெகு சிலரே இருப்பார்கள். அவர்களில் மிக மிக முக்கியமானவர்களில் ஒருவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இன்று உலகத் தமிழர்கள் மத்தியில் மெல்லிசை மன்னர் என்ற அடையாளத்தோடு இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இசையமைப்பாளர் என்ற பெருமை கூறியவர். பிரபல பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம்,வாணி ஜெயராம்,எஸ்.ஜானகி, சீர்காழி கோவிந்தராஜன் போன்ற பாடல்களை உருவாக்கிய பெருமை இவரையே சேரும்.

அது மட்டும் இல்லாமல் வாலிபர் கவிஞர் என்று அழைக்கப்படக்கூடிய வாலி போன்ற பல பாடலாசிரியர்களை உருவாக்கியுள்ளார். ஒரு முறை வாலி விஸ்வநாதன் சாரை சந்திக்கும் வரை என்னிடம் உணவு உணவே பணமில்லை. ஆனால் விஸ்வநாதன் சாரை சந்தித்த பின்பு எனக்கு உணவு உண்ணவே நேரமில்லை என்று கூறியுள்ளார். எண்ணற்ற பல படங்களின் தன்னுடைய மெல்லிசை பாடலின் மூலம் மக்களின் மனம் கவர்ந்தார். ஒருமுறை ரஜினி அளித்த பேட்டியில் எந்த தலைமுறை களும் எம்.எஸ்.வி போன்ற ஒருவரை காண்பது அரிது.

காரணம் பொய் பொறாமை இல்லாத தன்னலமற்ற துறவியாக வாழ்ந்தார். எம்.ஜி.ஆர் ,சிவாஜி போன்ற சாமானின் வெற்றிக்கு பின்னால் இவரின் பங்கு மிக மிக முக்கியமானது. இவரால்தான் திரைப்பட தயாரிப்பாளர் பாலச்சந்தர் பாடல் ஆசிரியர் வாலி மற்றும் கண்ணதாசன் ஆகியோரின் வாழ்க்கை வெற்றி பெற்றது. என்றும் கூறியுள்ளார். அப்படி இசையில் சரித்திரம் படைத்து வெற்றி கொடி நாட்டிய எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு முதலில் ஆர்வம் இருந்தது என்னவோ நடிப்பில் தான்.

இதைப் பற்றி அவரே ஒரு பேட்டியில் கூறியதாவது,” சின்ன வயசுல என் குருநாதர் நீலகண்ட பாகவதரிடம் பாட்டு பயிற்சிதான் எடுத்துகிட்டேன். அவர் நாடகங்களும் எழுதுவார். அப்போ கேரளாவில் இருந்த சிறைக் கதையின் பொழுதுபோக்குக்காக நாடகம் போட்டார். அந்த நாடகத்தில் அவர் என்னை லோகிதாசனாக நடிக்க வச்சார்‌. அதைப் பார்க்க வந்த கலெக்டர் இந்த பையன் சினிமா நடிச்சா பெரிய ஆளா வருவான் என்று சொன்னார். அன்னையிலிருந்து எனக்கு சினிமாக்கு பைத்தியம் பிடிச்சு போச்சு”.

”எப்படியாவது சினிமாவில் சேர்ந்திடனும்னு முடிவு பண்ணினேன் என் மாமா மூலம் ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஆபீஸ் பாயாக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அங்கு கண்ணகி திரைப்படத்தின் வேலை சென்று கொண்டிருந்தது. அதில் பாலமுருகன் வேஷத்தில் நடித்தேன். அப்புறம் குபேர குசலா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆபீஸ்ல இருக்கும்போது ஆர்மோனிய பெட்டியை துடைக்கிற வாய்ப்பு கிடைத்தது. அந்த சாக்குல அதை ஆசை ஆசையாய் தடவி பார்ப்பேன். இந்த நேரத்தில் தான் டி.எஸ்.பாலையா அண்ணன் பழக்கம் எனக்கு ஏற்பட்டது”.

”அவர் தன்னோட நாடக குரூப்ல சேர்த்து கிட்டார். அவரோட பல நாடகங்கள்ல சின்ன சின்ன வேஷங்களில் நடித்தேன். பின்னர் சினிமாவுல அண்ணன் பாலையா பிஸியாகி விட்டதால் முன்ன மாதிரி நாடகங்கள் பெருசாக நடத்தப்பட முடியவில்லை நாடகங்கள் இல்லாததால் வறுமையில் வாடினேன். மறுபடியும் ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கே திரும்பினேன். அங்கே தான் என் வாழ்க்கைல ஒளிவிளக்கு ஏத்தி வச்ச இசையமைப்பாளர் எம் எஸ் சுப்பையா நாடு வை சந்தித்தேன்”.

”அவர் என்னை தன்னோட உதவியாளராக சேர்த்து கிட்டார். அதன் பிறகு இசையில் என் முழு கவனத்தையும் செலுத்தினேன். அங்கிருந்துதான் என்னுடைய இசைப்பயணம் தொடங்கியது. பிற்காலத்தில் சினிமாவில் எனக்கு கிடைத்த நண்பர்கள் மூலம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்”. இவ்வாறு அந்த பேட்டியில் நடிகனாகும் ஆசையிலிருந்து இசையமைப்பாளரான சம்பவத்தை கூறியுள்ளார். ஒருவேளை எம்.எஸ்.வி மட்டும் நடிகனாக இருந்தால் இன்று மெல்லிசை மன்னர் என்ற இசை மேதையை தமிழ் சினிமா தவறவிட்டு இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews