பதவியேற்ற முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்கு ஆளான சபாநாயகர் ஓம் பிர்லா

நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று கடந்த ஜுன் -ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்த பிஜேபி இந்த முறை கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது.

நேற்று மக்களவையில் தற்காலிக சபாநாயகராக பர்த்ரு ஹரி மகதாப் பதவி ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து பிரதமர் மோடி உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.பி.களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் இந்திய அரசியல் வரலாற்றில் முதன் முறையாக சபாநாயகரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. ஏற்கனவே சபாநாயகராக இருந்த ஓம்பிர்லா மற்றும் காங்கிரஸ் சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மீண்டும் ஓம் பிர்லா பெயரையே முன்மொழிந்தனர். மேலும் இண்டியா கூட்டணி எம்.பிகள் கொடிக்குன்னில் பெயரை முன்மொழிந்தனர். இறுதியில் சபாநாயகராக மீண்டும் ஓம்பிர்லாவே தேர்வு செய்யப்பட்டார். அவரை பிரதமர் மோடி, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரபுப் படி அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

கைவிட்ட வடிவேலு.. முதல் ஆளாக முந்திய சிம்பு.. வெங்கல்ராவுக்கு குவியும் உதவிகள்..

அவருக்கு அனைத்து எம்.பிகளும் பாராட்டு மற்றும் வாழ்த்துத் தெரிவித்தனர். மேலும் இடைக்கால சபாநாயகராக செயல்பட்ட பர்த்ரு ஹரி மகதாப்-க்கு நன்றியைத் தெரிவித்தனர். இந்நிலையில் நாடாளுமன்றம் துவங்கிய முதல் நாளே பரபரப்பாக அவை காணப்பட்டது. காரணம் இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜன்சி குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா குறிப்பிட்டுப் பேசியது தான்.

அவர் பேசும் போது, நாட்டையே அவசர நிலை சிறையாக மாற்றியது. நம் நாட்டில் அநியாயம் நிலவிய காலம். அவசர நிலைப் பிரகடனம் அரசியல் சாசனம் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று கண்டனம் தெரிவிக்க அவையில் கூச்சல் நிலவியது. எதிர்க்கட்சிகள் சபாநாயகரின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசும் போது அம்பேத்கர், காந்தி போன்ற தலைவர்களின் சிலைகள் நாடாளுமன்றத்தில் இடம் மாற்றப்பட்டது குறித்து பேச அவருக்கு மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனால் அவர் பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து பேசினார். இப்படி பதவியேற்ற முதல் நாளே சபாநாயகர் ஓம்பிர்லாவின் செயலால் இண்டியா கூட்டணி எம்.பி.கள் அதிருப்தி அடைந்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews