மிதுனம் தை மாத ராசி பலன் 2023!

சூர்யனின் பெயர்ச்சியால் எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும். கடந்த காலங்களில் நடந்த பிரச்சினைகள் தற்போது மீண்டும் பெரிதாய் உருவெடுக்கும். இல்லத்தரசிகளுக்கு கணவருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் – மனைவி இடையேயான ஒற்றுமை அதிகரிக்கும்.

குழந்தை பாக்கியம் குறித்து எதிர்பார்த்து இருப்போருக்கு நற் செய்தி தேடிவரும். குடும்பத்தில் ஒற்றுமை, நிம்மதி, மகிழ்ச்சி அதிகரித்துக் காணப்படும்.

மாணவர்கள் கல்விரீதியாக ஆர்வத்துடன் படிப்பார்கள், நினைத்த உயர்கல்வி சார்ந்த படிப்புகளுக்குத் தேர்வு ஆவார்கள். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இடமாற்றம், வேலை மாற்றம் போன்றவற்றிற்கு எதிர்பார்த்து இருப்போருக்கு எதிர்பார்த்தது போன்ற மாற்றம் நிகழும்.

4 ஆம் இடத்தில் குரு பார்வை இருப்பதால் அசையும், அசையாச் சொத்துகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தொழில்ரீதியாக அணுகுமுறை சிறப்பாக இருப்பதால் தொழிலை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கடன்கள் கிடைக்கப் பெறும். மேலும் உங்கள் தொழில் துறை சார்ந்த வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்.

ராசிநாதன் புதன் வக்ரகதியில் விலகி 8 ஆம் இடத்திற்கு இடப் பெயர்ச்சி செய்வதால் அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுத்து வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு இருந்த ஆரோக்கியம் சார்ந்த குறைபாடுகள் சரியாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews