மிதுனம் புரட்டாசி மாத ராசி பலன் 2022!

புதன் பகவான் 4 ஆம் இடத்தில் 15 நாளும், கன்னியில் 15 நாளும் சஞ்சரிக்கவுள்ளார். குரு பார்வை 2 ஆம் இடத்திலும் விழுகின்றது. 11 ஆம் இடத்தில் இராகு பகவான் உள்ளார்.

கௌரவம், புகழ், செல்வாக்கு என உங்களின் அந்தஸ்து உயரும், புதனின் ஆதிக்கத்தால் பணவரவு அதிகமாக இருக்கும். எடுக்கும் புது முயற்சிகள் வெற்றிக்கு அழைத்துச் செல்லும், குடும்பத்தில் நிம்மதி, சந்தோஷம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் கணவன் – மனைவி இடையேயான ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார மேன்மை இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கப் பெறும். குழந்தைகள் கல்வியில் மேம்பட்டுக் காணப்படுவார்கள்.  உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல நினைத்தது கைகூடி வரும்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், தாய் வழி தந்தை வழி சொந்தங்களால் ஆதரவு பெருகும். வண்டி, வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் கொடுப்பீர்கள்.

5 ஆம் இடத்தில் கேது இருப்பதால் குலதெய்வ வழிபாடு செய்தல் வேண்டும். குழந்தைகள்- பெற்றோர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பூர்விகச் சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும், எதிரிகளால் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

திருமண காரியங்கள் கைகூடி வரும், சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபமிட்டு வழிபாடு செய்து வருதல் வேண்டும். வேலைவாய்ப்பு ரீதியாக புதிதாக வேலை தேடுவோர், உயர் பதவிக்கு முயற்சிப்போருக்கு ஏற்ற காலமாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.