மிதுனம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!

ஏப்ரல் 22ஆம் தேதி மிதுன ராசிக்கு 11 ஆம் இடத்தில் குருபகவான் பிரவேசிக்க உள்ளார். பல ஆண்டுகளாக தள்ளிப் போன/தடங்கல்கள் நிறைந்திருந்த சுப காரியங்கள் விறுவிறுவென நடந்தேறும்.

தொழில் மற்றும் வியாபாரம் ரீதியாக அபிவிருத்தி செய்யும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருந்தோருக்கு நல்ல செய்தி தேடி வரும்.

தொட்டது துலங்கும் காலமாக இருக்கும்; வியாபாரத்தில் ஏற்றம், தொழிலில் ஏற்றம், கல்விரீதியான ஏற்றம் என ஏற்றங்கள் நிறைந்த காலமாக இருக்கும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஒவ்வொரு சனிக் கிழமையும் பசு மாட்டுக்கு உணவு கொடுத்து வந்தால் பெரியோர்களின் தோஷம் கழியும்.

லாப ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் பண ரீதியாக இருந்த கஷ்டங்கள் கழியும்; இது உங்களுக்கு பெரும் மன நிம்மதியைக் கொடுக்கும். வண்டி, வாகனங்களை வாங்க ஆசை கொண்டு இருந்தவர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும்,

திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன் அமையும். மேலும் விவாகரத்துவரை சென்ற தம்பதியினர் புரிந்து கொண்டு மீண்டும் ஒன்று சேர்வர்.

காதலை வீட்டில் சொல்லும்போது இதுவரை பெற்றோர் எதிர்ப்புக் காட்டிய நிலையில், தற்போது உங்களின் மனதைப் புரிந்து கொள்வர். குடும்பத்துடன் பெருமாளை வழிபாடு செய்து வருதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.