விஜய், அஜீத்துக்கு மிஸ் ஆன மருதமலை.. காமெடியில் பங்கம் பண்ணிய இயக்குநர் சுராஜ்

சிரிக்க வைத்தே வயிற்றைப் புண்ணாக்கும் காமெடி கலந்த மாசலாப் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவரது மாணவர் தான் சுராஜ். தனது குருவான சுந்தர் சி யுடன் உள்ளத்தை அள்ளித்தா முதல் பல படங்களில் அவருக்கு உதவியாளராக இருந்துள்ளார். தொடர்ந்து அவரிடமிருந்து தனியாக வந்து முதன் முதலாக மூவேந்தர் என்ற படத்தினை இயக்கினார். இந்தப் படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.
இதற்கு அடுத்ததாக தனது குருவான சுந்தர் சியை முதன் முதலாக ஹீரோவாக வைத்து தலைநகரம் என்ற படத்தினை இயக்கினார்.

தலைநகரம் படம் வடிவேலுவின் காமெடிக்காகவே ஓடியது. வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரம் என்றென்றும் வயிற்றைப் பதம் பார்க்கும் கிளாசிக் காமெடியாகத் திகழ்ந்தது. இதனையடுத்து சுராஜ் இயக்கத்தில் அடுத்து வந்த படம் தான் மருதமலை.
தலைநகரம் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரம் பிரபலமானது போல் மருதமலை படத்திலும் என்கவுண்டர் ஏகாம்பரம் கதாபாத்திரம் மிகவும் மக்களை ரசிக்க வைத்தது. காவல் துறையின் அடாவடிகளை காமெடியாகக் காட்டி ரசிக்க வைத்திருந்தார் இயக்குநர் சுராஜ்.

இவரது அருள் இருந்தால் தான் ஸ்ரீதேவியின் அருள் கிடைக்குமாம்… அப்படின்னா இதைப் படிங்க முதல்ல..!
மருதமலை படத்தில் அர்ஜுனுக்குப் பதிலாக முதலில் நடிக்க இருந்தவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜீத் ஆகியோர் தான். இந்தப் படத்தின் கதையை முதலில் சுராஜ் விஜய்யிடம் கூறியிருக்கிறார். விஜய்யும் ஓகே சொல்ல அட்வான்ஸ் முதற்கொண்டு வாங்கப்பட்டது. அதன்பிறகு கலைப்புலி தாணுவிற்காக சச்சின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் விஜய். எனவே இந்தப் படத்தினை முடித்து அடுத்து உங்கள் படத்தில் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் அதன்பின் இந்த முயற்சி கைகூடவில்லை. இந்நிலையில் இவருக்கு அஜீத்துக்கு கதை சொல்லும் வாய்ப்பு வரவே மருதமலை கதையை அஜீத்துக்கு சொல்லியிருக்கிறார். ஆனால் அஜீத்துக்கு கதை பிடித்த போதும் அப்போது தான் கிரீடம் படத்தில் போலீஸ் ஆவது போல் நடித்திருந்தார். எனவே மீண்டும் போலீஸ் கதை வேண்டாம் என ஒதுக்கியிருக்கிறார்.

இந்நிலையில் அர்ஜுனிடம் சுராஜ் கதை சொல்ல அவரும் நான் டி.எஸ்.பி, ஏ.சி.பி என உயர் காவல் பதவிகளில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்தப்படத்தில் கடைநிலை காவலராக நடிக்க யோசனையாக உள்ளது என்று கூற, அதற்கு சுராஜ் கதையின் பிற்பகுதியில் நீங்கள் இன்ஸ்பெக்டராக வருவது போல் இருக்கும் என்று கூற அதன்பின் சம்மதித்து நடித்திருக்கிறார்.
மருதமலை படம் வெளியாகி சக்கைப் போடு போட்டது. குறிப்பாக வடிவேலுவின் காமெடிக் காட்சிகள் இன்னும் பிரபலமாக உள்ளது. இந்தக் காலகட்டத்தில் தான் வடிவேலு புகழின் உச்சியில் இருந்தார். எனவே வடிவேலுவுக்காக அர்ஜுனே அவரது கால்ஷீட்டுக்கு ஏற்றவாறு நடித்தாராம். இதுமட்டுமன்றி இந்தப் படத்தில் காவல்துறையைக் களங்கப்படுத்தியாக சுராஜை காவல்துறை கண்டிக்க அதன்பின் அவர்களை சமாதானம் செய்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...