எப்படி பாஸ் இது.. தோனி இப்படி தான் சிக்ஸ் அடிப்பாரு.. தல வருவதற்கு முன்னாடியே சரியா கணிச்ச கிரிக்கெட் பிரபலம்..

ருத்துராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் ஆடி உள்ளது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி கண்டிருந்த சென்னை அணி, 3 வது போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக விசாகப்பட்டினம் மைதானத்தில் தோல்வி அடைந்திருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 191 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி அடைய சென்னை அணியில் பேட்டிங் ஆர்டர் வலுவாக இருந்ததால் இந்த முறை அவர்கள் எளிதாக வெற்றி பெற்று விடுவார்கள் என்று தான் ரசிகர்கள் கருதினர். ஆனால், டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது பவர் பிளே ஓவர்களை சிறப்பாக வீசி, ரவீந்திரா மற்றும் ருத்துராஜ் ஆகியோரின் விக்கெட்டை சாய்த்து சென்னை அணிக்கு குடைச்சல் கொடுத்து பின்னர் அதிலிருந்து மீள முடியாமல் செய்து விட்டார்.

ரஹானே மற்றும் டேரில் மிட்செல் தவிர பின்னர் வந்த ஜடேஜா, ஷிவம் துபே, சமீர் ரிஸ்வி என யாரும் பேட்டிங்கில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அப்படி ஒரு சூழலில் தான் இந்த சீசனில் முதல் முறையாக பேட்டிங் ஆட வந்த தோனி, கலீல் அகமது, நோர்ஜே என டெல்லி அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துகளை சிக்ஸர் மற்றும் ஃபோர்களுக்கு பறக்க விட்டார். 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோற்றாலும் போட்டியின் கடைசி பந்தில் தோனி சிக்ஸர் அடித்ததை ஏதோ ஐபிஎல் கோப்பையை அவர்கள் வென்றது போல மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி இருந்தனர்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் தோனியின் ஆரம்ப கட்டத்தில் எப்படி எல்லாம் சிக்ஸர்களை அடிப்பாரோ அதே போல இந்த போட்டியிலும் அடித்திருந்தார். கடந்த ஒரு சில ஐபிஎல் சீசன்களில் தோனியின் சிறந்த பேட்டிங்கை பார்க்க முடியாமல் போன நிலையில், இந்த சீசனில் அவர் ஆடிய ஒரு போட்டியிலேயே தனது பேட்டிங் மீதான விமர்சனத்தை உடைத்தெறிந்து விட்டார் தோனி.

பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஃபார்முக்கு தோனி திரும்பி உள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பும் இனி வரும் போட்டிகளில் அதிகரித்துள்ளது. இந்த போட்டியின் கடைசி ஓவரில், இரண்டு ஃபோர்கள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை தோனி பறக்க விட்டிருந்தார். அதில் கடைசி பந்தை தோனி சிக்சருக்கு அடித்து போட்டியை அவர் முடித்து வைத்திருந்தார்.

அப்படி ஒரு சூழலில், தோனி கடைசி பந்தில் சிக்ஸ் அடிப்பார் என அதற்கு முன்பாகவே சரியாக கணித்திருந்தார் சிஎஸ்கேவின் பயிற்சியாளர் மைக் ஹசி. தோனி பேட்டிங் ஆட வருவதற்கு முன்பாக பேசி இருந்த ஹசி, “எனது கணிப்புப்படி இந்த போட்டியின் கடைசி ஓவரில் தோனி பேட்டிங் செய்து கொண்டிருப்பார். ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே கடைசி பந்தில் தோனி சிக்ஸ் அடித்து போட்டியை முடிப்பார்” என கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே தோனி சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...