ஒரு போஸ்டர் கூட இல்ல.. ஆனாலும் உலக சாதனை படைத்த எம்.ஜி.ஆர் படம்

ஒரு திரைப்படம் ஒரு நடிகரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு உலகம் முழுவதும் புகழ்பெற்றவராக மாற்றியதென்றால் அந்தத் திரைப்படம்தான் உலகம் சுற்றும் வாலிபன். அடிமைப்பெண், நாடோடி மன்னன் மெஹா ஹிட் படங்களுக்கு அடுத்தபடியாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். அப்பபே சயின்ஸ் பிக்சன் கதையை எடுத்து அதை ரசிகர்களுக்கு புதுவிதமாக தந்திருந்தார்.

மிக அதிக பொருட்செலவிலும், உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளிலும் ஷுட்டிங் நடத்தப்பட்டு இறுதியாக 1973-ல் இப்படம் வெளியானது. திரையிட்ட அனைத்து இடங்களிலும் இமாலய வெற்றி பெற்றது. அதுவரை வந்த தமிழ் சினிமாவில் எந்தப் படமும தொடாத இமலாய வசூல் சாதனையைப் பெற்றது.

எம்.எஸ்.விஸ்வநாதனின் மயக்கும் இசையும், வெளிநாடுகளைக் கண் குளிரக் தனது கேமிராவில் காண்பித்த வி.ராமமூர்த்தியின் ஒளிப்பதிவும் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்தது. வெளியான 6 மாதங்களில் இந்த திரைப்படம் மாநில அரசுக்கு மட்டும் சுமார் 60 லட்சம் ரூபாய் வரியாகக் கொடுத்து வசூல் சாதனை ஏற்படுத்தியது என்று அப்போதே செய்தித்தாளில் வெளியிடப்பட்டது. அந்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது இந்த திரைப்படம். 200 நாட்களுக்கு மேல் ஓடியும் திரையரங்குகள் ஹவுஸ்புல்லாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த திரிசூலம்.. ஏதோ பரவாயில்லை என்று சொன்ன சிவாஜி.. புள்ளி விபரத்துடன் அடுக்கிய எம்.ஜி.ஆர்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தத் திரைப்படத்திற்கு போஸ்டர்களே ஒட்டவில்லை என்பது தான். இதற்குப் பின்னால் உள்ள அரசியல்தான் காரணம். அப்போது திமுகவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவரும் காலத்தில் எம்.ஜி.ஆர் திமுகவினை விட்டு விலகி, அதிமுக என்ற புதுக் கட்சியை தொடங்கியிருந்தார். அதனால் ஆளும் கட்சியாக இருந்த திமுக திரைப்படம் வெளிவருவதைத் தடுக்க பல முயற்சிகள் மேற்கொண்டது.

முக்கியமாக திரைப்படத்தின் விளம்பரத்திற்கு பிரதானமாக போஸ்டர்களை மட்டுமே நம்பியிருந்த காலத்தில் சுவரொட்டிகளின் மீதான வரியை தமிழக அரசு ஏற்றியது. இதனால் நிதி நெருக்கடி காரணமாக போஸ்டர் விளம்பரத்தினை எம்.ஜி.ஆர் தவிர்த்தார். இருந்த போதிலும் படம் வெளியாகி சக்கைப் போடு போட்டது.

இதுமட்டுமன்றி இப்படத்தில் இடம்பெற்ற ‘நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்..‘ என்ற பாடல்தான் அதிமுகவின் பிரதான கொள்கை பரப்புப் பாடலாக இன்றுவரை ஒலித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் 50-வது ஆண்டினைக் கொண்டாடும் வகையில் சமீபத்தில் டிஜிட்டல் வடிவில் வெளியாகி மீண்டும் சக்கைப் போடு போட்டது.

எந்த வகையில் சோதனை வந்தாலும் அனைத்தையும் தவிடுபொடியாக்கி சினிமாவிலும், அரசியலிலும் தனிப்பெரும் ஜாம்வானாகத் திகழ்ந்தவர் தான் எம்.ஜி.ஆர். அதற்கு உலகம் சுற்றும் வாலிபனும் ஒரு சாட்சி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...