எம்.ஜி.ஆர் சொல்லச் சொல்ல கேட்காத டைரக்டர்.. கடைசியில் படுதோல்வி ஆன படம்.. இதுதான் காரணமா?

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் சண்டைக் காட்சியில் வில்லனிடம் அடி வாங்கினாலே தாங்கிக் கொள்ளாத ரசிகர்கள் மத்தியில் கிளைமேக்சில் அவர் இறந்து போவது போன்ற காட்சியை வைத்தால் சும்மா விடுவார்களா? வெகுண்டெழுந்து டைரக்டரை நார் நாறாக கிழித்துத் தொங்க விட்டு விட்டனர். வித்தியாசமாக படம் எடுக்கிறேன் என இயக்குநர் செய்த ஒரு தவறால் படமும் தோல்வி அடைந்து எம்.ஜி.ஆர் ரசிகர்களையும் எரிச்சலடையச் செய்தது. இவ்வளவு விமர்சனங்களுக்கு உண்டான ஒரு படம்தான் பாசம்.

1962-ல் இயக்குநர் ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்தது பாசம் திரைப்படம். பால் வண்ணம் பருவம்.., உலகம் பிறந்து எனக்காக…., ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை.. போன்ற பாடல்களால் மனதைக் கொள்ளை கொண்ட பாசம் திரைப்படம் கதையில் சோபித்தது.

இயக்குனர் ராமண்ணா, இத்திரைப்படத்தின் இறுதியில் எம்.ஜி.ஆர் கதாப்பாத்திரம் இறந்துவிடுவது போன்ற ஒரு காட்சியை எழுதி இருந்தார். அதை பார்த்த எம்.ஜி.ஆர், “இத்திரைப்படத்தின் கதை நன்றாக இருக்கிறது. ஆனால் கிளைமேக்ஸில் எனது கதாப்பாத்திரம் இறப்பது போன்று இருக்கிறது. இதனை எனது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். படம் நிச்சயமாக தோல்வியை தழுவும்” என கூறியுள்ளார்.

இவன் சினிமாவுக்கு சரிபட்டு வரமாட்டான்.. அவமானப்படுத்திய எம்.எஸ்.வி படத்துக்கே பாடல் எழுதி சாதித்த வாலி..

ஆனால் இயக்குனரோ “இது மிகவும் வித்தியாசமான கிளைமேக்ஸ். ஆதலால் மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கமாட்டார்கள்” என கூறியுள்ளார். எனினும் எம்.ஜி.ஆர் கிளைமேக்ஸை மாற்றும்படி கூறிக்கொண்டே இருந்திருக்கிறார். ஆனால் இயக்குனரோ கிளைமேக்ஸ் வித்தியாசமாக இருக்கும் என பதில் அளித்த வண்ணம் இருந்தாராம். ஆதலால் எம்.ஜி.ஆர் ஒரு வழியாக “பாசம்” திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

“பாசம்” திரைப்படம் வெளிவந்தபோது எம்.ஜி.ஆர் நினைத்ததுதான் நடந்தது. ஆம்! படம் படுதோல்வி அடைந்தது. ரசிகர்களின் கனவு நாயகனான எம்.ஜி.ஆர் படத்தில் இறப்பது போல் வரும் காட்சியை ஏற்க மறுத்தனர். அதுமட்டுமன்றி இயக்குனர் ராமண்ணாவுக்கு பல ரசிகர்கள், எம்.ஜி.ஆர் இறப்பது போல் திரைப்படம் எடுத்ததற்கு கண்டனங்கள் தெரிவித்து கடிதங்கள் எழுதினராம். இதன் பிறகுதான் ராமண்ணா, எம்.ஜி.ஆர் கூறிய விஷயத்தை புரிந்துகொண்டாராம். தமிழக மக்களின் புரட்சித் தலைவராக திகழ்ந்த எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதை யாராவது தன் கண்கொண்டு பார்ப்பார்களா என்ன?

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...