திடீரென காஞ்சி மடத்துக்குப் போன எம்.ஜி.ஆர்.. இதை மட்டும் கேட்டு வாங்கிய மகா பெரியவர்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அப்போது முதலமைச்சராக இருந்த தருணம். அப்போது காஞ்சி மகா பெரியவரைத் தரிசிக்க எண்ணி திடீரென முன்னறிவிப்பின்றி காஞ்சி மகா மடத்திற்குச் சென்றிருக்கிறார் எம்.ஜி.ஆர். அவர் வருவதை அறியாத சங்கரமடம் வழக்கம்போல் தங்களது பணிகளை மேற்கொண்டிருந்தது. எம்.ஜி.ஆரின் கார் காஞ்சி சங்கர மடத்திற்கு வெளியே நிற்க மடமே பரபரப்பானது.

வழக்கமாக முதலமைச்சர் போன்ற மக்கள் தலைவர்கள் வந்தால் அவர்களுக்கு பூரண கும்ப மரியாதை அளித்து அவர்களுக்கு வரவேற்பு கொடுப்பது வழக்கம். ஆனால் அன்று அங்கும் எதுவும் நடைபெறவில்லை. ஏனெனில் எம்.ஜி.ஆரின் திடீர் விசிட் அது.

நேராகச் சங்கர  மடத்தின் உள்ளே சென்றவர் மகா பெரியவரைக் கேட்டிருக்கிறார். மகா பெரியவர் அப்போது மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு மடத்தில் தியானத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்று சங்கர மடத்தினர் தயக்கத்தோடு சொல்ல எம்.ஜி.ஆரின் கார் மகா பெரியவரை சந்திக்க சிறிய சந்தில் உள்ள ஒரு குடிலுக்குச் செல்கிறது.

40 ஆண்டுகளுக்கு முன் வெளியான கே. பாக்கியராஜ் படத்தின் ரீமேக்… கைக்கோர்த்த சசிகுமார்…

அங்கு வந்த எம்.ஜி.ஆரை மஹாபெரியவர் அன்புடன் வரவேற்று உபசரித்திருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆருக்கு அருளாசி வழங்கியிருக்கிறார். அப்போது மகா பெரியவர் “உன்னை உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை.” என்று கூற அதற்கு எம்.ஜி.ஆர் “அதனால் என்ன.? இங்கே இந்த மடத்துக்கு நீங்கள் தானே முதல்வர்.!” என்றபடி அவர்க்கு எதிரே மண் தரையில் உட்கார்ந்திருக்கிறார். (தன் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு சிலரைத்தான் மஹா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்.! அவற்றில் எம்.ஜி.ஆரும் ஒருவர்.!)

அப்போது மகா பெரியவர் தன் மனதில் இருந்த ஒரு ஆதங்கத்தை எம்.ஜி.ஆரிடம் தெரிவித்திருக்கிறார். அது முருகனின் அறுபடை வீடுகளையும் ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியே தரிசிக்க நிறைய பணம், கால விரயம், தேக சிரமம் ஏற்படுகிறது. அறுபடை வீடுகளையும் ஒன்றாக தரிசிக்க உங்களோட ராஜ்ஜியத்தில் ஒரு இடம் ஏற்படுத்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு எம்.ஜி.ஆர். இவ்வளவுதானே.. இதனை போனிலேயே தகவல் சொல்லியிருக்கலாம் அல்லவா.. உடனே ஏற்பாடு செய்கிறேன். என்று கூற, உன்னை நேரில் பார்க்கணும் போல இருந்தது என்று மகா பெரியவர் பதிலுக்குக்குக் கூற எம்.ஜி.ஆர்.நெகிழ்ந்து போயிருக்கிறார்.

இப்படியாக காஞ்சி மகா பெரியவா கேட்டதற்கிணங்க முதல்வராக இருந்த போது எம்.ஜி.ஆரால் உத்தரவிடப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது தான் பெசன்ட்நகர் முருகன் அறுபடை வீடு கோவில். மேலும் எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்த போது யாருக்கும் தனியாகப் பிராத்தனை செய்யும் பழக்கம் இல்லாத மகா பெரியவர் எம்.ஜி.ஆர். பூரண குணம் பெற வேண்டி மனமுருகி பிராத்தனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...