15 நிமிடத்தில் ஒரு காட்சியை 9 கோணங்களில் படமாக்கிய எம்ஜிஆர்! வியப்பில் ரசிகர்கள்!

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான மதுரை வீரன் படத்தில் தொடங்கி கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அவருடன் பல படங்களில் கண்ணன் நடித்திருக்கிறார். இந்த படத்தை பி ஆர் பந்தலு இயக்குவதாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அவர் இறந்ததால் இந்த படத்தை எம்ஜிஆரே இயக்கினார். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் பல காட்சிகள் ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டன. 26 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. எம்ஜிஆர் உடன் மற்றவர்களும் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. ஆனால் நடிகர் கண்ணனுக்கு வேலை இல்லை. படப்பிடிப்பின் கடைசி நாளில் பிற்பகல் 2 மணி இருக்கும் எம் ஜி ஆர் திடீரென ஏழு பக்க வசனங்களை கொண்டு வந்து அதன் ஒரு பகுதியை கண்ணனிடமும் கொடுத்தார். மற்றொரு பகுதியை லதாவிடம் கொடுத்தார்.

இருவரும் வசனங்களை மனப்பாடம் செய்துவிட்டு நான்கு மணிக்கு தயாராக இருங்கள் படப்பிடிப்பு இருக்கிறது என்று கூறிவிட்டு போய்விட்டார். இந்த படம் சரித்திர கதை என்பதால் நீண்ட வசனங்கள் இன்னும் இரண்டு மணி நேரத்தில் மனப்பாடம் செய்து தயாராக வேண்டுமே என்று கண்ணனுக்கு ஒரே குழப்பம் அதை எம்ஜிஆர் புரிந்து கொண்டார். இன்றுடன் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நாளை சென்னை புறப்படுகிறோம். நாடகத்தில் பல பக்க வசனங்களை மனப்பாடம் செய்து உனக்கு இது பெரிய காரியமா ஐந்து மணிக்கு மேல் சூரிய வெளிச்சம் சரியாக இருக்காது சீக்கிரம் தயாராகு என்று சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை கவனிக்க போய்விட்டார். எம்ஜிஆர் சொன்னபடி கண்ணன் வசனங்களை மனப்பாடம் செய்து நான்கு மணிக்கு தயாராக இருந்தார்.

கதைப்படி ஒரு நாட்டின் மன்னராக இருக்கும் கண்ணன் போருக்கு புறப்படுவார். லதா அதை தடுத்து நிறுத்த முயற்சிப்பார். அப்போது இருவருக்கும் இடையே நடக்கும் புரட்சிகரமான வாதங்கள் தான் அன்று எடுக்கப்பட இருந்த காட்சி. அந்த காட்சியை எடுக்க எப்படியும் ஒரு நாளாவது ஆகும். படம் பார்ப்பவர்களுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் வெவ்வேறு கோணங்களில் படமாக வேண்டும். நான்கு மணிக்கு படப்பிடிப்பை ஆரம்பித்து ஐந்து மணிக்கு எப்படி எம்ஜிஆர் படமாக்க போகிறார் என்று கண்ணனுக்கு ஒரே ஆர்வம். கண்ணனை விட சுறுசுறுப்பாக காட்சியை படமாக்குவதற்காக எம்ஜிஆர் தயாராக வந்தார். படத்தில் போர் காட்சிகளை படமாக்குவதற்காக ஒன்பது கேமராக்களை வரவழைத்தார் எம்ஜிஆர்.

டாப் ஹீரோக்கள் இயக்கிய திரைப்படங்கள் ஒரு பார்வை!

கண்ணனும் லதாவும் பேசும் வசன காட்சியை ஒரே சாட்டில் படமாக எடுக்க எம்ஜிஆர் முடிவு செய்திருந்தார். அதற்காக ஒன்பது கேமராக்களையும் ஒன்றின் பார்வை ஒன்றின் மீது விழாத வண்ணம் சிறப்பான முறையில் திறமையாக கோணங்களை அமைத்திருப்பார். 4.15 மணிக்கு எம்ஜிஆர் ஸ்டார்ட் சொல்ல 4.30 மணிக்கு காட்சி ஓகே ஆனது. ஒரு நாள் முழுக்க படப்பிடிப்பு நடத்தி எடுக்க வேண்டிய காட்சிகளை மக்கள் திலகம் எம்ஜிஆர் 15 நிமிடங்களில் எடுத்து முடித்தார். அந்த காட்சியை ஒரே சாட்டில் படமாக்கியது பெரிதல்ல, அதை 9 கோணங்களில் பிரித்து எடிட் செய்தார். இப்போது கூட அந்த படத்தின் காட்சிகள் பல கோணங்களில் பலமுறை எடுக்கப்பட்ட காட்சி போல தான் தெரியும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.