தடபுடல் விருந்தில் சாப்பிடாமல் காத்திருந்த எம்.ஜி.ஆர். மனுஷனுக்கு எப்படிப்பட்ட மனசு பார்த்தீங்களா?

வாரி வழங்கும் வள்ளல் குணத்திற்குச் சொந்தக்காரரான எம்.ஜி.ஆர்., ஒவ்வொரு தருணத்திலும் தன்னிடம் இருந்த தனிப்பட்ட வள்ளல் குணத்தையும், பெருந்தன்மையையும் இயல்பாகவே உணர்த்தியுள்ளார். இதற்க தக்க சான்று தான் இந்த சம்பவம். இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில், மணிவண்ணன் கதையில் உருவான படம் தான் அலைகள் ஓய்வதில்லை. கார்த்திக், இராதா அறிமுகமான இந்தப் படத்தினை எம்.ஜி.ஆர் திரையரங்கில் கண்டு களித்துள்ளார்.

பின்னர் இந்தப் படம் 100 நாட்களைக் கடந்து வெற்றி பெற்ற போது அதனைக் கொண்டாடும் விதமாக விழா எடுத்துள்ளனர். விழாவில் நடிகர் நடிகைகளையும், படக்குழுவினரையும் மனம் திறந்து பாராட்டிய மக்கள் திலகம் அனைவருக்கும் கேடயம் வழங்கிச் சிறப்பித்துள்ளார். இந்த விழா நடந்து முடிந்த பின்னர் எம்.ஜி.ஆருக்கு அப்போது டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருந்தது.

இதனை விழாவாக எடுத்து நடத்த முடிவு செய்த பாரதிராஜா பல திரைப் பிரபலங்களையும், விஐபிகளையும் அழைத்து தடபுடலாக நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் பந்தியில் அமர்ந்திருக்க எம்.ஜி.ஆர் மட்டும் சாப்பிடாமல் இருந்துள்ளார்.

எனக்கு ஜெமினி மாமான்னா உசிரு.. ஜெமினி – கமலுக்குள் இப்படி ஒரு உறவா?

இதனைக் கண்ட அனைவரும் சாப்பாட்டில் கை வைக்கலாமா வேண்டாமா என ஆழ்ந்த யோசனையில் இருந்திருக்கின்றனர். இருந்தாலும் சாப்பிடாத எம்.ஜி.ஆரை அருகிலிருந்த ஏ.வி.எம் சரவணன் ஏன் சாப்பிடவில்லை எனக் கேட்க, அதற்கு எம்.ஜி.ஆர் நீங்கள்தான் காரணம் என்று காதில் கிசுகிசுத்துள்ளார். ஏன் என்று கேட்க அதற்கு எம்.ஜி.ஆர். இங்கு தடபுடலாக அசைவ விருந்து தயாராகி உள்ளது. ஆனால் நீங்களும், சித்ராலட்சுமணனும் சைவப் பிரியர்கள்.

எனவே உங்கள் இருவருக்ககாவும் தனியே சாப்பாடு வரச் சொல்லப்பட்டிருக்கிறது. அது வரட்டும்.. அதன்பிறகு நாம் அனைவரும் சாப்பிடலாம் எனக் கூறியிருக்கிறார். தன்னுடன் சாப்பிடமால் இருந்த இருவருக்காக இவரும் சாப்பிடாமல் இருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மக்கள் திலகத்தின் இந்த குணத்தைக் கண்டு அப்போது அனைவரும் மெய்சிலிர்த்திருக்கின்றனர். எம்.ஜி.ஆர் ஏன் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதற்கு இச்சம்பவம் ஒரு மிகச் சிறந்த சான்று. இந்தத் தகவலை சினிமா பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் தனது வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews