படத்திற்காக மொத்த பணத்தையும் இழந்து நின்ற எம்ஜிஆர்! தக்க சமயத்தில் கைகொடுத்து உதவிய நண்பர்!

எம்ஜிஆர் என்ற சொன்ன உடனே நம்மில் பலருக்கு வியப்பு தான் முதலில் தோன்றும்.  அவரது திரைப்பயணமும், அரசியல் பயணமும் இன்றைய நடிகர்களுக்கு முக்கிய ஊன்றுகோலாக உள்ளது. நடிகர் எம் ஜி ஆர் ஒரு சிறந்த நடிகராக மட்டுமில்லாமல் சில திரைப்படங்களை இயக்கி தயாரித்து தன் பன்முகத் திறமையை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் நீங்காத இடத்தையும் பெற்றுள்ளார்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்முதலில் இயக்குனராக அறிமுகமான படம் நாடோடி மன்னன். இந்த படத்தில் எம்ஜிஆரின் இயக்கத்தில் நம்பிக்கை இல்லாத நடிகை பானுமதி படத்தில் இருந்து பாதியில் விலகி கொண்டதாகவும், அவருக்கு பதிலாக நடிகை சரோஜாதேவி நடித்ததும், அந்த நேரத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து சுவாரசியமாக அமைந்திருந்தது. அந்த படம் எம்ஜிஆர்க்கு இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என மூன்று துறைகளிலும் பெரிய வெற்றி படமாக அமைந்ததும். அதனைத் தொடர்ந்து சில வருடம் இடைவெளிக்குப் பிறகு எம்ஜிஆர் மீண்டும் இயக்கி தயாரித்து நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன்.

1970 இல் தொடங்கப்பட்ட இந்த படத்தில் எம்ஜிஆர்,சந்திரலேகா, மஞ்சுளா, லதா, நம்பியார், அசோகன், நாகேஷ் என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட முதல் படம் என்ற சிறப்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர், நடிகைகள் என பலரை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை நடிகர் எம் ஜி ஆர் பெற்றிருந்தார். நீண்ட நாள் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம் இரண்டு ஆண்டுகள் ஆகியும் வெளியாகவில்லை என்பதால் இதற்கான செலவு அதிகரித்துக் கொண்டே சென்றது. மேலும் இந்த படத்தில் அதிகப்படியான பாடல்கள் இருந்த நிலையில் எம்ஜிஆர் மேலும் ஒரு பாடலை சேர்க்க திட்டமிட்டு அந்த பாடலை டார்ஜிலிங்கில் படமாக்க முடிவு எடுத்திருந்தார்.

இந்த பாடல் காட்சிக்காக எம் ஜி ஆர் விளையாட்டு கற்றுக் கொண்டிருந்த நேரத்தில் தான் திண்டுக்கல்லில் இடைத்தேர்தல் வந்திருந்தது. அந்த சமயத்தில் இடைத்தேர்தலுக்கு முன்பாக படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என எம்ஜிஆரின் ஆலோசகர் ஆர் எம் வீரப்பன் ஆலோசனை கூறியுள்ளார். எம்ஜிஆர் தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் இந்த பணத்திற்காக செலவு செய்து விட்டதால் இடைத்தேர்தலில் செலவு செய்ய அவரிடம் போதுமான அளவு பணம் இல்லை. இந்த படத்தை ரிலீஸ் செய்தால்தான் பணம் கிடைக்கும் என யோசித்த வீரப்பன் எம்ஜிஆர் இடம் தனது மன கருத்துக்களை கூறினார். ஆனால் எம்ஜிஆர் படம் வெளியாகி தோல்வியை சந்தித்தால் அது இடைத்தேர்தலையும் பாதிக்கும் என சிந்தித்து தேர்தலுக்குப் பின் படத்தை வெளியிடலாம் என முடிவு செய்திருந்தார்.

டாப் ஹீரோக்கள் இயக்கிய திரைப்படங்கள் ஒரு பார்வை!

ஆர் எம் வீரப்பன் எம்ஜிஆர் இடம் தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் இந்த படத்திற்காக மொத்தமாக செலவு செய்து விட்டோம். இனி புதிதாக பாடல் காட்சி எடுப்பதற்கு படம் இல்லை எடுத்து வரைக்கும் போதும் என்று கூறி படத்தை வெளியிடும் படி கேட்டுக்கொண்டார். வீரப்பனின் யோசனையை சரி என்று நினைத்த எம்ஜிஆர் இறுதி பாடல் காட்சிகள் இல்லாமலேயே படத்தை ரிலீஸ் செய்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பற்றி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனையை படைத்திருந்தது.

படத்தின் வெற்றியை தொடர்ந்து தேர்தலிலும் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக தனது மொத்த பணத்தையும் செலவு செய்த எம்.ஜி.ஆருக்கு தக்க சமயத்தில் ஆலோசனை கொடுத்து அவரின் பணத்திற்கு பாதுகாப்பாக நின்றவர் தான் ஆர் எம் வீரப்பன். மேலும் சிறப்பாக இந்த உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக நடிகர் எம் ஜி ஆர் போஸ்டர் போன்ற எந்த விளம்பரங்களும் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews