வட இந்தியாவிலும் வள்ளலாக விளங்கிய எம்.ஜி.ஆர்.. எல்லைச் சாமிகளுக்கு தோள் கொடுத்த வரலாறு..

மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரனை இன்றும் பல வீடுகளில் தெய்வமாக போற்றிப் பூஜித்து வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அவரது வள்ளல் குணம். சினிமாவில் தான் நடித்து சேர்த்து வைத்த சொத்துக்களை ஏழைகளின் நலனுக்காகவே செலவிட்டவர். வறியவர்களுக்கு தேடிச் சென்று உதவும் குணம் படைத்த பொன்மனச் செம்மல். இதன் காரணமாகவே அரசியலில் இவர் நின்ற போதும் எம்.ஜி.ஆர் என்ற பெயருக்காகவே மக்கள் இவருக்கு அமோக வெற்றியைத் தேடித் தந்தனர்.

தமிழகத்தில் மட்டுமல்ல வட இந்தியாவிலும் கூட எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை கண்டு அவரைப் போற்றி இருக்கின்றனர் வட இந்தியர்கள். எம்.ஜி.ஆர். முதன் முதலாக ஏ.வி.எம் நிறுவனத்துடன் கைகோர்த்து நடித்த படம் ‘அன்பே வா‘. இந்தப் படத்தின் ஷூட்டிங் இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் நடந்து கொண்டிருந்தது. அப்போது இந்தியா – பாகிஸ்தான் போர் நடந்து கொண்டிருந்த சமயம்.

போரில் காயம் பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இந்திய வீரர்களைச் சந்திக்க  படக் குழுவினருடன் போயிருந்தார் எம்ஜிஆர். எம்ஜிஆரைப் பார்த்ததுமே அங்கிருந்த தென்னக வீரர்கள் அடையாளம் கண்டு, நெகிழ்ந்து போனார்கள். அப்போது நமது ராணுவ வீரர்களுக்காக அப்போது சிம்லாவில் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசியிருக்கிறார்கள் எம்ஜிஆரும் சரோஜாதேவியும்.

முதன்முதலில் ஜெயலலிதாவுக்காக கதை செதுக்கிய கதை பாரதிராஜா.. ஜெ. நடிக்க முடியாமல் போனது இந்தப் படம் தானா?

அந்நிகழ்ச்சியில் பேசிய எம்.ஜி.ஆர்., “நண்பர்களே, இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் நீங்கள் எவ்வளவு பணம் திரட்டுகிறீர்களோ, அதற்கு ஈடான தொகையை நான் எனது தனிப்பட்ட நிதியாகத் தர விரும்புகிறேன்,” என்றார். இப்படி ஒரு அறிவிப்பை யாருமே அங்கு எதிர்ப்பார்க்காததால் திகைத்துப் போய்விட்டார்கள். கைத்தட்டல்களால் அந்தப் பகுதியே அதிர்ந்தது.

அன்றே, அங்கு திரண்ட நிதி எவ்வளவு என்று கேட்டுத் தெரிந்து கொண்ட எம்ஜிஆர், தன் சம்பளத்தில் கணக்கு வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, அங்கேயே பணத்தை தயாரிப்பாளரிடமிருந்து பெற்று நிதிக்குக் கொடுத்துவிட்டார். இந்தச் செய்தி வட இந்தியப் பத்திரிக்கைகளில் வெளி வந்தது. அவ்வளவு தான் எம்.ஜி.ஆரை வட இந்தியர்களும் தூக்கிக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

ஷுட்டிங் நடந்து கொண்டிருந்த நாட்களில் அவரைக் காண கூட்டம் அலைமோதியது. ஒரே இரவில் அவரின் கொடைத் தன்மை வட இந்தியாவில் பரவி அங்கும் ஹீரோவானார் நம் புரட்சித் தலைவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...